ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார்.
பாலிவுட்டில் சில படங்கள் நடித்தாலும் பெரிய ஹீரோயினாக முடியாததால் பின்னர் தமிழ் சினிமாவிற்கு திரும்பி வந்து தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார்.
ஆனால் எந்த மொழியிலும் முன்னணி நடிகையாக முன்னேற முடியவில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்றாலும் பெரிய அளவில் அவரால் ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் மீண்டும் சுமோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள பிரியா ஆனந்த், அதன் பிறகு பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பட வாய்ப்புகளுக்கு முன்னோட்டமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பெரிய நடிகையாக வந்திருக்க வேண்டியவர் சமீபத்தில் எல்கேஜி படத்தில் காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக நடித்து, இருந்த மார்க்கெட்டையும் தொலைத்து கொண்டார் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
இந்நிலையில், சூரிய வெளிச்சத்தில் நிழல் மட்டும் தெரிவது போல போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நானும் அப்படித்தான் நெனச்சேன், Zoom பண்ணி பாத்த அப்புறம் தான் தெரிஞ்சது பேண்ட் போட்டு இருக்காங்க என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.