தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார்.
இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019-ம் ஆண்டு பிரிந்தனர். அப்போது வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார்.
தற்போது ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசனை இறுக்கி அணைத்தபடி இருக்கும் போட்டோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார் சாந்தனு. இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து இவர் தான் ஸ்ருதியின் புதிய காதலர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த லாக்டவுனை தனது பாய் பெஸ்டியுடன் இணைந்து கழிக்கப் போவதாக நடிகை ஸ்ருதிஹாசன் ஓப்பன் ஸ்டேட்மென்ட் வெளியிட்டுள்ளார். முன்னதாக தனது இஎம்ஐ பில்களை தானே தான் கட்ட வேண்டும் என்றும், அம்மாவும் அப்பாவும் அதற்கு உதவ மாட்டார்கள் என பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.
இது குறித்து கேள்வி எழுப்பிய போது, ஏன் கஷ்டம் இருக்கக் கூடாதா… நடிகையா இருந்தா இ.எம்.ஐ., இருக்காதா என்ன. உதாரணத்துக்கு ஒரு வீடு, கார் வாங்குவதா இருந்தால் கடன் வாங்க வேண்டி இருக்கும்.
எங்களுக்கும் பிரச்னைகள் இருக்கு. நான் பெரிய பணக்காரி இல்லை. இதை சொல்ல ஆச்சரியம், அசிங்கப்பட ஒன்றுமில்லை என நினைக்கிறேன் என கூறியுள்ளார் அம்மணி.