“இது புதுசா இருக்கே..!…” – சிம்பு, நயன்தாரா பற்றி இந்த விஷயத்தை கேள்வி பட்டிருக்கீங்களா..? –

அண்ணாத்த படப்பிடிப்பிற்காக நடிகை நயன்தாரா ஹைத்ராபாத் சென்றுள்ள போட்டோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. 

 

இந்நிலையில் படப்பில் பங்கேற்பதற்காக நடிகை நயன்தாரா ஹைதராபாத் சென்றார். விமானத்தில் இருந்து நயன்தாரா இறங்கி நடந்து செல்லும் போட்டோ இணையத்தில் வைரலாகின. 

 

தொள தொள சட்டை கிழிந்த ஜீன்ஸ் என மாடர்ன் லுக்கில் விமானத்தில் இருந்து இறங்கி ஒய்யாரமாக நடந்து சசென்றார். கூலர்ஸ் மற்றும் மாஸ்க்குடன் நயன்தாரா நடந்து செல்லும் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. 

 

 

இப்படி பிஸியாக இருக்கும் நயன்தாரா முதன் முதலில் அறிமுகமான படம் ஐயா. ஆனால், இந்த படத்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டியவர் நயன்தாரா. ஆனால், சில காரணங்களால் ஐயா படம் அவருடைய முதல் படமாகி விட்டது என்று பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் கூறியுள்ளார். 

 

இது குறித்து அவர் கூறியதாவது, துரை இயக்கத்தில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா படம் மூலம் தான் நயன்தாரா கோலிவுட்டில் அறிமுகமாக வேண்டியது. நான் தான் அவரை அறிமுகம் செய்து வைக்க வேண்டியது. 

 

 

தொட்டி ஜெயா படத்திற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்தபோது பத்திரிகை ஒன்றில் நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்தேன். தொட்டி ஜெயாவில் நயன்தாராவை நடிக்க வைக்க நான் விரும்பியபோது இயக்குநர் துரையும், கேமராமேன் ஆர்.டி. ராஜசேகரும் கோபிகாவுக்கு வாக்குறுதி அளித்துவிட்டனர். 

 

அதனால் நயன்தாராவை அந்த படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை என்றார். தொட்டி ஜெயாவில் மிஸ் ஆனாலும் அதன் பிறகு வல்லவன் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடித்தார் நயன்தாரா. மேலும் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்திலும் சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடித்தார்கள். என்று கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam