“அவள விடவே மாட்டேன்..” – “அந்த” வார்த்தை கூறிய தாமாரை செல்வி – சண்டை வளர்க்கும் நமீதா..!

 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தாங்கள் ஏன் வெற்றி பெற தகுதியானவர்கள் என்று மற்ற போட்டியாளர்கள் முன்பு தெரிவிக்க வேண்டும். மற்ற போட்டியாளர்கள் பேசுபவர்களின் உரையை மதிப்பிட வேண்டும். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் திருநங்கையான நமிதா மாரிமுத்து கலந்துகொண்டுள்ளார். 

 

ஒரு திருநங்கையை போட்டியாளராக தேர்ந்தெடுத்ததற்கு விஜய் டிவியை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் போட்டியாளர்கள் முன்பு பேசும் நமிதா, ”, ஒருவர் வாழ்க்கையில் குறையிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும் என்று என் அம்மா சொல்வார். 

 

ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை அடித்தார்கள். சமுதாயத்தில் திருநங்கைகளை பாலியல் தொழிலாளியாகவும், பிச்சை எடுப்பவராகவும் பார்க்கிறார்கள். 

 

 

எல்லோரும் என்னை மாறுங்கள் என்கிறார்கள். முதலில் நீங்கள் மாறுங்கள். நாங்கள் எப்பொழுதோ மாறிவிட்டோம் என்று கண்ணீர் விட்டு அழுகிறார். அவர் பேச்சைக் கேட்கும் மற்ற போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கின்றனர். 

 

இந்நிலையில், சற்று முன் வெளியான ப்ரோமோ வீடியோவில், நமிதா மாரிமுத்து கடுமையான கோபத்துடன் தாமரை செல்வி-யை விடவே மாட்டேன் என்று கூறுகிறார். என்னை பார்த்து “உனக்கென்ன 40 குழந்தைகள் இல்ல 400 குழந்தைகளை கூட நீ வளரப்பமா..” என்று ஏளனமாக சிரித்தபடியே கூறியதாக நமிதா க்ளெய்ம் செய்கிறார். 

ஆனால், தாமரை செல்வியோ, நான் பேச்சு வாக்குல தான் சொன்னேன்.. அதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேன் என்று இமான் அண்ணாச்சியிடம் முறையிடுகிறார். இமான் அண்ணாச்சி இந்த பிரச்சனையை சுமூகப்படுத்த முனைகிறார். 

 

இங்க வந்து உக்காருமா என்று நமீதாவிடம் இமான் அண்ணாச்சி கூற, என்னை மன்னித்துவிடுங்கள் இதற்கு நான் உடன்பட மாட்டேன் தாமரை செல்வியை விடவே மாட்டேன் என்று கோபம் கொப்பளிக்க பேசுகிறார். எதற்க்கா, இந்த குழந்தைகள் வளர்ப்பு பற்றிய பிரச்சனை வந்தது என இன்றைய எபிசசோடை பார்த்தால் தான் தெரியவரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *