உயர் ரத்த அழுத்தத்தை எளிமையாக விரட்டும் வழி..! – Ways to Control Blood Pressure Naturally..!

இரத்த அழுத்தம் குறைய உணவு : இந்தியாவைப் பொறுத்தவரை 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோயை போலவே பல்கி பெருகி வருகிறது.

 உலகெங்கிலும் ஒரு பில்லியன் மக்களுக்கும் மேலாக இந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணத்தால் எண்ணற்ற பக்க நோய்கள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. குறிப்பாக இதய நோய்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இந்த ரத்த அழுத்தத்திற்கு உள்ளது.

 எனவே இந்த ரத்த அழுத்தத்தை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள எளிய உணவு முறைகளை உங்கள் உணவில் எடுத்துக் கொள்வதின் மூலமும் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்வதின் மூலமும் ரத்த அழுத்தத்தை நீங்கள் இயற்கையான முறையில் கட்டுப்படுத்த முடியும்.

அந்த வகையில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஐந்து உணவுகளைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

👍கொழுப்பு அதிகம் இருக்கக்கூடிய மீன்களில் ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலத்தின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இது இதய ஆரோக்கியத்திற்கு சிறப்பானதாக டாக்டர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.

👍 மேலும் இந்த கொழுப்புகள் வீக்கத்தை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது. பல ஆய்வுகள் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலத்தின் அதிக உட்கொள்ளலை குறைக்க பணி ஆற்றுவதால் ரத்த அழுத்தம் அளவு கட்டுக்குள் இருக்கிறது.

👍 எனவே கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளுக்கு பதிலாக சத்து நிறைந்த இரத்த அழுத்தத்தை குறைக்கும் மீன் உணவை எடுத்துக் கொள்வது நல்லது.

👍நாம் வேண்டாம் என்று தூக்கி எறிய கூடிய பூசணி விதைகளில் அதிக அளவு மெக்னீசியம், பொட்டாசியம், அர்ஜினைன்  போன்ற சத்துக்கள் இருப்பதால் இவை ரத்தத்தின் அழுத்தத்தை தளர்த்தி விடுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது.

👍எனவே பூசணி விதைகளை நீங்கள் தூரப் போடாமல் வறுத்து அப்படியே உண்ணலாம்.

👍 இது போலவே காய்கறிகளில் பீன்ஸில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இதைப்போலவே பயிறு வகைகளிலும் இச்சத்துக்கள் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது. மேலும் மற்ற காய்களை விட பீன்ஸுக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடிய ஆற்றல் உள்ளது என்று பல்வேறு வகையான ஆய்வுகளின் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது.

👍கேரட்டில் இருக்கும் குளோரோஜெனிக் பி- கூமரிக் ,காஃபிக் அமிலங்கள்,பினோலிக்  கனவுகள் அதிகமாக இருப்பதால் இவை ரத்த நாளங்களை தளர்த்தவும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும் இதன் மூலம் ரத்த அழுத்தம் அதிக அளவில் குறைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் உங்கள் உணவுகளில் அன்றாடம் அல்லது வாரத்திற்கு இரண்டு மூன்று முறையாவது கேரட்டை பச்சையாக சாப்பிட பழக்கி கொள்ளுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version