தலைவர் மட்டுமா தாக்கப்பட்டாரு..? தமிழ்நாடே தாக்கப்பட்டிருக்கு..! ப்ளூ சட்டை மாறனை வச்சி செய்யும் இணையவாசிகள்..!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது தான் இந்தியன்.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர் ,கவுண்டமணி ,செந்தில் உள்ளிட்ட பல பேர் நடித்திருப்பார்கள் .

1996ல் கலக்கிய “இந்தியன்” தாத்தா:

இத்திரைப்படத்தில் கமலஹாசன் அப்பா மகன் என்னை இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். சுதந்திரப் போராட்ட தியாகியாக அப்பாவாகவும் , மகன் சந்துருவாகவும் கமல்ஹாசன் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஆரம்ப முதலே வர்மக்கலை மூலம் குற்றவாளிகள் கொலை செய்யப்படுவார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கச் செய்த திரைப்படமாக இந்தியன் திரைப்படம் அமைந்தது.

அதை அடுத்து பல வருடங்கள் கழித்து தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனே நடித்திருக்கிறார்.

சில வருடங்களாக மும்முரமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

“இந்தியன்” இரண்டாம் பாகம்:

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே தொடங்கும் எனவும் படம் 2019-ல் வெளியாகும் எனவும் அறிவித்திருந்தார்கள் .

ஆனால், பல தடைகளை தாண்டி இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. இதையடுத்து படப்பிடிப்பில் பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டது.

2020 ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்த விபத்தில் மூன்று நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதனால் படத்தின் படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டது.

இதை அடுத்து மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்தியன் 2 ட்ரைலர் ரிலீஸ்:

இப்படியான சமயத்தில் நேற்று இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியாகி எல்லோரது வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரில்.. படிப்புக்கு ஏத்த வேலை இல்லை… வேலைக்கு ஏற்ற சம்பளம் இல்லை திருடுறவன் திருடிட்டு தான் இருப்பான் என ஊழல் குறித்து பல வசனங்கள் இடம் பெற்று இருக்கிறது.

மேலும், இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் பல அதிரடியான தோற்றங்களில் காட்சியளிக்கிறார். சட்டையை கழட்டி விட்டு சண்டை போடுகிறார்.

வர்மக்கலையில் கொலை செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது . அதுமட்டுமில்லாமல் கடைசியாக இந்த ட்ரெய்லரில் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”என பிக் பாஸ் வசனம் இடம் பெற்றிருக்கிறது.

இப்படியாக இந்தியன் தாத்தா திரும்பி வந்து அதகளம் செய்திருக்கிறார். இந்த ட்ரெய்லருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இப்படியான நேரத்தில் பிரபல சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்தியன் 2 திரைப்படத்தை கடுமையாக விமர்சித்து கமல் ஹாசனை பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

இத்திரைப்படத்தில் கமலஹாசன் உடன் சித்தார்த், பாபி சிம்ஹா, நடிகைகள் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர்.

அனல் பறக்கும் அரசியல் வசனங்கள்:

அந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இதில் நடித்துள்ள கமலஹாசன் நடிகராக மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் பொது தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் .

சமீப காலமாக அவருடைய நடவடிக்கைகள் பொதுமக்கள் பலராலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

இந்த ட்ரெய்லரில் குறிப்பாக ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. இங்கே சிஸ்டம் சரியில்லை என்று ஆளாளுக்கு சொல்லுவோம்.

ஆனால் அதை ஒரு சிறிய துரும்பை கூட கிள்ளி போட மாட்டோம் என்ற வசனம் தான் அது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை தான் தாக்கி இருக்கிறார்கள் என்று பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு பளார்:

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஊழலை ஒழிப்போம் இப்படிக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாடுமே தாக்கப்பட்டிருக்கிறது.

இதில் தனியாக தலைவரை தாக்கி விட்டார்கள் என்ற உங்களுடைய கருத்தை எப்படி புரிந்து கொள்வது..? என ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். மேலும் ப்ளூ சட்டை மாறனை எல்லோரும் வச்சி செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version