கணவர் இறந்த சில மாதத்தில் ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் மன்மதன் பட நடிகை செய்யும் அட்டூழியம்..!

ஹிந்தி சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் ஒரு சில நடிகைகளில் மந்த்ரா பேடி முக்கியமானவர். இவர் தமிழிலும் மன்மதன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

1995 முதல் பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் நடிகையாக மந்த்ரா பேடி இருந்து வருகிறார். பாலிவுட்டிலும் மிக அதிகமாக இவர் திரைப்படங்கள் நடிக்கவில்லை. மொத்தமே ஒரு 20 திரைப்படங்களுக்குள்தான் இவரது திரைப்படங்கள் இருக்கும்.

பாலிவுட்டில் வரவேற்பு:

ஆனால் நிறைய டிவி தொடரில் இவர் நடித்துள்ளார். சின்னத்திரையில் 1994 முதல் இப்போது வரையிலுமே நிறைய தொடர்களில் நடித்து வருகிறார். இது இல்லாமல் சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். கோலிவுட் சினிமாவில் சில நடிகைகள் எப்படி எப்போதும் சர்ச்சைக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்களோ அதே போல பாலிவுட்டில் ஒரு சர்ச்சைக்குள்ளான நடிகையாக மந்த்ரா பேடி இருந்து வருகிறார்.

இவர் நடிகை, தொகுப்பாளினி, ஃபேஷன் டிசைனர், என்று பல துறைகளில் பணிபுரிந்து இருக்கிறார். மன்மதன் திரைப்படத்தில் பிரபலமான ஒரு டாக்டர் கதாபாத்திரம் இருக்கும். அதை வைத்து நிறைய மீம்கள் கூட பிறகு சமூக வலைதளங்களில் வெளிவந்தன.

அந்த டாக்டர் கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்திருந்தார். இவர் 1999இல் ராஜ் கவுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தன.

கணவர் இழப்பு:

இந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் இவரின் கணவர் ராஜ் கவுல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த திடீர் மரணம் அப்பொழுது பாலிவுட் சினிமாவிலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பிறகு கணவரின் இறுதி சடங்குகள் முழுவதையும் மந்த்ரா பேடியே நடத்தினார்.

இந்த நிலையில் தற்சமயம் 50 வயதை கடந்திருக்கும் மந்த்ரா பேடி ஆதித்யா மோத்வானி என்பவரை காதலித்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இருந்தாலும் இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் ஒன்றாக சேர்ந்து சென்று வருவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

கணவர் மரணம் அடைந்து ஒரு ஆண்டு கூட நிறைவு பெறாத நிலையில் அதற்குள்ளாகவே இன்னொரு ஒரு நபருடன் சுற்றித் திரிகிறார் என்று இவரை குறித்து பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் மந்த்ரா பேடி சமீபத்தில் ஆதித்யா மோத்வானி உடன் இணைந்து நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்க்க முடிகிறது இந்த புகைப்படம் இதுவரை இருந்து வந்த வதந்தியை உண்மை என நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version