பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகர் போஸ் வெங்கட்டின் மகளின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கன்னிமாடம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் போஸ் வெங்கட்.
இந்த படத்தில் நடிகர் விமல் சாயாதேவி சரவணன் உள்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் பற்றி போஸ் வெங்கட் கூறும்பொழுது, மா பொ சி என்றதும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பெயர் தான் பலருக்கும் நியாபகம் வரும்.
ஆனால், அந்தப் படத்திற்கும் இந்த தலைப்பிற்கும் சம்பந்தமே இல்லை இந்த படத்திற்கு மா.பொ.சி என தலைப்பு வைத்ததில் இருந்தே பல சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த படத்தின் உண்மையான இந்த பட தலைப்பின் உண்மையான அர்த்தம் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்பதுதான். இதனை சுருக்கி மா.பொ.சி என வைத்தோம்.
இது கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று கூறியிருந்தார். மறுபக்கம் சினிமா சீரியல் என இரண்டிலும் பிஸியாக பயணித்து வரும் இவர் அரசியலிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்து இருக்கிறார்.
பிரபல அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் கட்சியின் பணிகளிலும் தன்னை இணைத்துக் கொள்கிறார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போஸ் வெங்கட் நான் அரசியலில் இருப்பது ஏதோ திடீரென நடந்தது கிடையாது.
என் அப்பா இந்த கட்சியில் தான் இருந்தார். எங்கள் வீட்டில் நிறைய அந்த கட்சி தலைவரின் புகைப்படங்கள் இருக்கும். நான் லோடுமேன் ஆக வேலை செய்தபொழுது அந்தக் கட்சித் தலைவரின் இல்லத்தை கடந்து தான் செல்வேன்.
இப்படி என்னுடைய குடும்பமே அரசியல் பின்புலம் கொண்டதுதான். அதனால் நான் அரசியலில் இருப்பதை ஏதோ புதிய விஷயமாக யாரும் கருத தேவையில்லை என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இவருடைய மகள் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் போஸ் வெங்கட்டின் மகளா இது…? என்று வாயை பிளந்து வருகின்றனர்.