பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவுக்கு பதிலா நடிக்க இருந்தது இந்த நடிகையா..? நல்ல வேளை நடிக்கல..

சில இயக்குனர்களில் படங்களில் நடிக்க வேண்டும் என்பது பிரபல நடிகர், நடிகையர் பலரது ஆசையாக இருக்கிறது. குறிப்பாக 30 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர்கள் கே பாலசந்தர், மணிரத்னம், பாரதிராஜா, ஸ்ரீதர், மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லுவர். ஏனெனில் அவர்களது படங்களில் நடிப்பது, மிகப்பெரிய அனுபவமாக தொழில் கற்றுக்கொள்ளும் பாடமாக இருக்கும்.

அதே போல் இப்போது டைரக்டர்கள் ஷங்கர், வெற்றிமாறன், அமீர், சேரன், பாலா, சமுத்திரக்கனி போன்றவர்களின் படங்களில் நடிப்பதை பெரிய ஆசையாக இன்றைய நடிகர், நடிகையர் கூறி வருகின்றனர். அதற்கு காரணம், அவர்கள் ஆகச்சிறந்த படைப்பாளிகளாக தங்களை பல படங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது படங்களில் நடிப்பதை பெரிய பேறாக கருதுகின்றனர்.

டைரக்டர் ஷங்கர்

அந்த வகையில் டைரக்டர் ஷங்கர், மிக பிரமாண்டமான ஒரு இயக்குனர் என புகழ் பெற்றவர். அவர் இயக்கிய எல்லா படங்களுமே மெகா ஹிட் படங்கள்தான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதுவரை இயக்குனர் ஷங்கரை நம்பி தியேட்டருக்குள் சென்ற யாரையுமே அவர் ஏமாற்றியது இல்லை.

சிவாஜி, எந்திரன், 2.0, இந்தியன், நண்பன், முதல்வன், அந்நியன், ஐ, காதலன், ஜீன்ஸ், ஜெண்டில்மேன் என அவர் இயக்கிய படங்கள் எல்லாமே மாஸ் ஹிட்தான். இப்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3, கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். ஷங்கர் இயக்கிய படங்களில் மிக வித்யாசமான படம், இளம் காதலர்கள் கதையை மையப்படுத்திய பாய்ஸ் படம்தான்.

பாய்ஸ் படத்தில்

பாய்ஸ் படத்தில் சித்தார்த் பிரதான கதாநாயகனாகவும், ஜெனிலியா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். பரத், நகுல், தமன், மணிகண்டன் என நான்கு பேரும் சித்தார்த் நண்பர்களாக நடித்திருந்தனர். இதில் விவேக் பிரதான கேரக்டரில் மங்களம் சாராக காமெடி செய்திருந்தார். பாய்ஸ்க்கு உதவுகிற ஒரு ரோலில் நடித்திருந்தார்.

மாணவ பருவத்து காதல் கதையை சொன்ன இந்த படம், பல காட்சிகள் காமெடியாகவும், பல காட்சிகள் காதலை மையப்படுத்தியதாகவும் இருந்தது. எனினும் சில காட்சிகள் வரம்பு மீறிய ஆபாச காட்சிகளாக தெரிந்ததால், இந்த படத்தை அப்போது பலரும் கடுமையாக விமர்சித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெனிலியா நடிப்பு

ஆனால் இந்த படத்தில் ஜெனிலியா கேரக்டர் மிக பிரமாதமாக இருந்தது. அவரது நடிப்பும், அழகும் வெகு க்யூட்டாக ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்பட்டது. ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின.

விடலை பையன்களின் சேட்டை, இளம் வயது காதல், பெற்றோர்களது மனநிலை, வாழ்க்கையில் வரும் சிக்கல்கள் என பல விஷயங்களை காதலும், காமெடியும் கலந்து இந்த படத்தை கொடுத்திருந்தார் ஷங்கர்.

இந்த படத்தில் நடித்த பிறகு ஜெனிலியா தமிழில் பல படங்களில் நடித்தார். குறிப்பாக வேலாயுதம், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ஜெனிலியா ஒரு ரவுண்டு வந்தார்.

இதையும் படியுங்கள்: அய்யோ கடவுளே.. கடைசி வரை நிறைவேறாமலே போன டேனியல் பாலாஜியின் ஆசை.. ரசிகர்கள் கண்ணீர்..!

பாலிவுட் நடிகருடன் காதல்

கடந்த 2012ம் ஆண்டில், பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இப்போது குடும்ப வாழ்வில் செட்டிலாகி விட்டார் ஜெனிலியா. இப்போது மீண்டும் அவர் சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

வரலட்சுமி சரத்குமார்

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சரத்குமார் மகள் வரலட்சுமி, பாய்ஸ் படம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், பாய்ஸ் படத்தில் ஜெனிலியா கேரக்டரில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஷங்கர் நான் நடிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆடிஷன் நடந்தது. நானும் சித்தார்த்தும் புகைப்படங்களும் எடுக்கப்பட்டோம்.

அப்பா விடவில்லை

ஆனால் அப்பா நடிக்க கூடார் என்று கூறிவிட்டார். இந்த படம் மட்டுமல்ல, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் காதல் படத்திலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் சரோஜா படத்திலும் என்னை நடிக்க அப்பா சரத்குமார் விடவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: தொகுப்பாளினி DD-யின் சொத்து மதிப்பு தெரியுமா..? கிறுகிறுன்னு வருதே..

நல்லவேளை நீங்க நடிக்கலை…

நல்ல வேளை நீங்க நடிக்கலை, ஜெனிலியா நடிச்சதால்தான் பாய்ஸ் படம் இப்பவும் பார்க்கறதுக்கு நல்லா இருக்குது என, ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version