கறிபலாக்காயில் குழம்பு பொரியல் செய்வது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இன்று கிராமப்புறங்களில் அதிக அளவு கறிபலா காய் சிப்ஸ் செய்து குழந்தைகளுக்கு உண்ண கொடுத்து அசத்தி வருகிற உண்மை உங்களுக்கு தெரியுமா.
அதிலும் தோட்டத்தில் பிரஷ்ஷாக பறித்த கறிபலா காயில் சிப்ஸ் செய்து சாப்பிடும் போது அது தரும் சுவைக்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது. மேலும் இந்த கறிபலாவில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் கட்டாயம் இதை குழந்தைகளுக்கு குறுந்தீனியாக கொடுக்கலாம்.
கறி பலா சிப்ஸ் செய்வதற்கான பொருட்கள்
- கரி பலாக்காய் ஒன்று
- தேங்காய் எண்ணெய் அரை லிட்டர்
- உப்பு தேவையான அளவு
- மிளகாய் தூள் அல்லது மிளகுத்தூள் காரத்திற்கு ஏற்ப
செய்முறை
முதலில் கறி பலாக்காய்க்கு வெளியில் இருக்க கூடிய தோலை நன்றாக எடுத்து விட வேண்டும். அதற்கு முன்பு உங்கள் கையில் சிறிதளவு எண்ணெயை தேய்த்துக்கொண்டு நறுக்க வேண்டும் இல்லை என்றால் இந்த காயில் இருக்கும் பிசுபிசுப்பு மற்றும் பால் உங்கள் கைகளில் ஒட்டிக் கொள்ளும்.
தோல் சீவி இருக்கும் கறி பலாவை நான்கு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பின்னர் இதனை நல்ல நீரைக் கொண்டு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். இதனை அடுத்து சிப்ஸ் சீவ கூடிய துருவியில் இதை நன்றாக சீவி எடுக்க வேண்டும்.
இதன் பின்பு அடுப்பில் வாணலியை வைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
இப்போது இந்த தேங்காய் எண்ணெய் சூடேறி இருக்கும். அப்படி சூடேறி இருந்தால் அதன் மேலே புகை கிளம்பும் இந்தப் புகை வருவதற்கு முன் எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
இதனை அடுத்து அனைத்தையும் பொறித்து எடுத்து ஒரு பவுலில் போட்ட பின் அதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் கலந்து கொள்ளலாம். ஒரு சிலருக்கு மிளகாய் தூள் தேவை இல்லை என்றால் மிளகுத்தூளை போட்டு சாப்பிடலாம்.
ஒருமுறை இந்த கறிபலா சிப்ஸ் – ஐ செய்து பாருங்கள். இதனை கட்டாயம் உங்கள் பிள்ளைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.