Site icon Tamizhakam

ரெண்டாம் தாரமான பவி டீச்சர் பிரிகிடா சாகா..? பெரிய தப்பு பண்ணிட்டேன் என புலம்பும் நடிகரின் முன்னாள் மனைவி..!

இன்று இருக்கும் இளம் தலைமுறைகளை கட்டிப் போட்டிருக்கும் youtube பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இந்த youtube சேனலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் பிரிகிடா சாகா யூடியூபில் வெளி வந்த ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடரின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்.

இந்த தொடரில் அவர் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடித்த பிறகு பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அனைவரும் இவரை அன்போடு பவி டீச்சர் என்று அழைக்கிறார்கள்.

இரண்டாம் தாரமான பவி டீச்சர் பிரிகிடா சாகா..

தற்போது இந்த பவி டீச்சர் பற்றிய விவகாரமான விஷயம் தான் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு அவர் இரண்டாம் தரமாக வாழ்க்கை பட்டுவிட்டாரா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதற்குக் காரணம் இரண்டாம் திட்டம், அடியே, ஹாட்ஸ்பாட் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் பிரிகிடாவுடன் திருமண கோலத்தில் இருக்கின்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து இந்த கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் படத்தின் ப்ரோமோஷன்காக இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்களா? என்ற எதிர்பார்ப்பு கேள்விகளை அதிகமாக கேட்டிருக்கும் ரசிகர்களுக்கு இவர்கள் விடை சொன்னால் மட்டும் தான் உண்மை என்ன என்பது புரியும்.

தற்போது ரசிகர்கள் அனைவரும் இவரது பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.
எனவே விரைவில் இவர்கள் பதில் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பெரிய தப்பு பண்ணிட்டேன்..

மேலும் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஒரு மிகப்பெரிய தவறை செய்து விட்டேன் என்று சொல்லி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதற்கு காரணம் 3 என்ற படத்தை இயக்கிய ஐஸ்வர்யா இந்த படத்தில் அவரது கணவரான தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து இயக்கியிருந்தார்.

அத்தோடு இந்த படம் வெளி வந்த பிறகு சுருதிஹாசன் மற்றும் தனுஷ் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியது.

இந்த சூழ்நிலையில் அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும் போது தன்னுடைய படங்கள் அனைத்தையும் இவரது மகன்கள் பார்த்து இருக்கிறார்கள் என்று கூறினார்.

புலம்பும் நடிகரின் முன்னாள் மனைவி..

எனினும் நான் இயக்கிய படங்கள் அத்தனையும் பார்த்த எனது மகன்களுக்கு நான் இயக்கிய 3 படத்தை இது வரை போட்டுக் காட்டியதில்லை என்ற பகீர் உண்மையை பகிர்ந்திருக்கிறார்.

இதற்குக் காரணம் ஒரு தாயாக இருந்து அந்தப் படத்தை என் மகன்களுக்கு போட்டு காட்டினால் அது அவர்களுக்கு ஒரு மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். மேலும் ஹர்டிங்காக இருக்கும் என்பதால் அதைச் செய்யவில்லை.

மேலும் எனக்கு தெரியாமல் ஒரு வேலை அவங்க பார்த்து இருந்தாலும் பார்த்திருக்க வாய்ப்பிருக்கு தெரிஞ்சி இருந்தாலும் தெரியாமல் இருந்தாலும் என்னால் அந்த படத்தை இப்போதைக்கு போட்டு காண்பிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார்.

ஆனால் வை ராஜா வை என்ற படத்தை அவர்கள் மிகவும் ரசித்துப் பார்த்ததாக கூறியிருக்கிறார். தனது மகன்களுக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது எனினும் ஒரு டிகிரியை முடித்து விட்டு அவர்கள் விருப்பம் போல் செய்யலாம் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

Exit mobile version