சில நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்தாலும், ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகைகளாக மாறிவிடுகின்றனர். அந்த படத்தை மீண்டும் காணும்போது அல்லது அந்த படம் குறித்து பேசும்போது அந்த நடிகையின் நடிப்பை, கவர்ச்சியை சிலாகித்து பேசுவது ரசிகர்கள் மத்தியில் வழக்கம்.
போக்கிரி
நடிகர் விஜய், சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருந்தது, போக்கிரி படம். இந்த படத்தில் அசின் ஜோடியாக நடித்திருந்தார். சங்கி மங்கியாக குங்க்பூ கராத்தே மாஸ்டராக வடிவேலு காமெடியில் அதகளம் செய்திருந்தார்.
பிரகாஷ் ராஜ் வில்லனாகவும், நாசர் விஜயின் அப்பாவாகவும், நெப்போலியன் போலீஸ் கமிஷனராகவும் நடித்த இந்த படம் பெரிய அளவில் மாஸ் மூவியாக ஹிட் ஆனது. இப்போதும் டிவி சேனலில் இந்த படம் காட்டப்பட்டால், டிஆர்பி ரேட்டிங் கணிசமாக எகிறி வருகிறது.
வேற லெவலில்
மணிஷர்மா இசையில், நடிகர் பிரபுதேவா டைரக்ட் செய்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு, நடனம், இசை என எல்லாமே வேற லெவலில் இருந்தது. அதனால் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இந்த படத்தை ரசித்து பார்த்தனர். இப்போதும் வாய்ப்பு கிடைத்தால், ஆர்வமாக ரசித்து பார்க்கின்றனர்.
வில்லி கேரக்டரில்
இந்த படத்தில் வில்லன் பிரகாஷ் ராஜ் கூட்டத்தில், பெண் கூட்டாளி வில்லி கேரக்டரில் நடித்தவர்தான் பிருந்தா பரேக். கவர்ச்சியிலும், திமிரான நடிப்பிலும், உடல் மொழியிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதையும் படியுங்கள்: அம்பிகா வாழ்வில் சோகங்கள்.. வடிவேலு கொடுத்த வாய்ப்பு.. அந்த நோய் இருக்குன்னு சொல்லி..
பிருந்தா பரேக்
தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்திருந்த பிருந்தா பரேக், சிலம்பரசன் நடித்த மன்மதன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். விஜயகாந்த் நடித்த சுதேசி, தனுஷ் நடித்த பொல்லாதவன், மாதவன் நடித்த குரு என் ஆளு மற்றும் சில்லுன்னு ஒரு சந்திப்பு உள்ளிட்ட படங்களில் பிருந்தா பரேக் நடித்திருக்கிறார்.
அதன்பிறகு தமிழ் சினிமாவில் அவரை காண முடியவில்லை. எனினும் எந்த நடிப்பாக இருந்தாலும், அதில் தன் திறம்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகையாகவே அவர் ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.
திருமணம்
இந்தி படங்களில் நடித்து வந்த பிருந்த பரேக், கடந்த 2013ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டு, குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை.
இதையும் படியுங்கள்: உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் நடிச்சேன்.. ஆனா.. பிரிகிடா சாகா ஓப்பன் டாக்..!
கணவர் மற்றும் மகனுடன்
இப்போது நீச்சல் குளம் ஒன்றில் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் தனது புகைப்படத்தை அவர், தனது சமூக வலைதள பக்கத்தில் அப்டேட் செய்திருக்கிறார். அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
போக்கிரி படத்தில் வில்லியாக நடிச்ச பிருந்தாவா இது, அட அடையாளமே தெரியலையே.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க என்று ஆச்சரியப்பட்டபடி ரசிகர்கள் அவரது புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.