” நினைத்தாலே சுவைக்க தூண்டும் நெய் கத்திரிக்காய் தொக்கு..!” – இப்படி செஞ்சு அசத்துங்க..!!

 நித்தம் நித்தம் நெல்லு சோறு நேத்து வைக்க மீன் குழம்பு என்று பாடல் வரிகளில் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த மீன் குழம்புக்கு பதிலாக கத்திரிக்காயில் தொக்கு செய்து சாப்பிட்டால் அந்த நெல் சோறும் மிகச் சுவையாக இருக்கும் என்பதை நீங்கள்  சுவைத்த பின் அறிந்து கொள்ளலாம்.

அப்படிப்பட்ட நெய் கத்திரிக்காய் தொக்கினை நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்து செய்து அசத்தினால் பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்.

 அந்த அளவுக்கு வீட்டில் மணத்தை ஏற்படுத்தக் கூடிய நெய் கத்திரிக்காய் தொக்கு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

 நெய் கத்திரிக்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

1.கத்திரிக்காய் பிஞ்சாக அரை கிலோ

2.ஒரு ஸ்பூன் நெய்

3.மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய்

4.தேவையான அளவு உப்பு

5.50 கிராம் எள்

6.25 கிராம் நிலக்கடலை

7.மஞ்சள் தூள் சிறிதளவு

8.வரமிளகாய் 4

செய்முறை

முதலில் நீங்கள் வைத்திருக்கும் கத்தரிக்காயை நன்கு கழுவி நீல வாக்கில் சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்.

 அதனை அடுத்து நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயை அதில் போட்டு லேசாக நீர் தெளித்து வேகவிடவும். இது வெந்து கொண்டு இருக்கும்போதே எடுத்து வைத்திருக்கும் வரமிளகாய், எள் மற்றும் நிலக்கடலையை லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு கொர கொர என பொடி  கொள்ளுங்கள்.

 பின்னர் கத்திரிக்காய் ஓரளவு வெந்தபின் மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய் இவற்றைப் ஊற்றி நன்கு பிரட்டி எடுக்கவும்.

இப்போது எண்ணெயிலேயே வெந்து இருக்கும் இந்த கத்திரிக்காய் நன்கு சுருண்டு வர வேண்டும். அப்படி சுருண்டு வரக்கூடிய நிலையில் நீங்கள் பொடித்து வைத்திருக்கும் பொடியை போட்டு நன்கு கிளறி விடுங்கள்.

 இதனை அடுத்து ஒரு டீஸ்பூன் அளவு நெய்யை இதன் மேல் ஊற்றி மீண்டும் ஒரு இலக்கு இலக்கி விடுங்கள். இப்போது உங்கள் வீடே மணக்கும் நெய் கத்திரிக்காய் தொக்கு தயார்.

இந்த தொக்கினை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம். சைடிஸ் ஆக வைத்துக் கொண்டும் சாப்பிடலாம். நீங்களும் எந்த தொக்கை செய்து உங்கள் வீட்டில் இருக்கும் நபர்களை அசத்துங்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …