“வீட்டுக்கு மளிகை சாமான் வாங்க போறீங்களா..!” – உங்க பணம், ஆரோக்கியத்த பாதுகாக்க இத பண்ணுங்க..!

வீட்டில் மளிகை சாமான்கள் தீர்ந்து விட்டால் மளிகை சாமான்கள் வாங்குவதற்கு நீங்கள் திட்டங்களை தீட்டி கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்குவீர்கள். இது ஒரு சிலருக்கு மிகவும் கடினமான பணியாக இருக்கும் இதற்கு காரணம் போதுமான அளவு பட்ஜெட் மற்றும் தெளிவில்லாத திட்டம் காரணமாக நீங்கள் குழம்பித் தவிப்பீர்கள்.

ஆனால் உங்கள் ஷாப்பிங் திட்டம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே அந்த அழுத்தத்திலிருந்து தப்பித்து நீங்கள் உங்கள் பொருட்களை உங்கள் பட்ஜெட்டில் வாங்கி ஆரோக்கியத்தையும், பணத்தையும் எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

எப்போதுமே நீங்கள் மளிகை பொருட்களை வாங்கும் போது ஒரு மாதத்திற்கான பொருட்களை வாங்கி விடுவது மிகவும் சிறப்பு. அதற்காக நீங்கள் சமையல் அறைக்குச் சென்று அங்கு இல்லாத பொருட்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 அதனை அடுத்து அந்த பொருளுக்கு உரிய விலையை போட்டு ஒரு பட்ஜெட்டையும் நீங்கள் உருவாக்குங்கள் .பிறகு நீங்கள் மளிகை பொருட்களை வாங்க செல்லும்போது உங்கள் பணத்துக்கு ஏற்றபடி பொருட்களை வாங்க முடியும்.

நீங்கள் எந்த பொருளை எடுத்தாலும் அந்த பொருளில் இருக்கும் லேபிளை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்த பொருள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் தேதி, காலாவதி தேதி போன்றவை உங்களுக்கு தெரிந்துவிடும். இதனை பார்த்து அந்த பொருளை நீங்கள் வாங்கலாம். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் பேணப்படும்.

 பருவ காலத்திற்கு உரிய பழங்கள் மற்றும் காய்களை வாங்க பழகிக் கொள்வதின் மூலம் உங்களுக்கு தொடர்பு இல்லாத பழங்களை நீங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக பருவ கால பழங்கள் காய்கறிகள் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும். மேலும் இது உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும்.

விரைவில் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை வாங்கி சேமிக்க வேண்டாம். இதன்மூலம் பண விரயம் ஏற்படுவதோடு பொருள் விரையமும் ஏற்படும்.

சில பொருட்களை வாங்கும் போது தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே கெட்டுப் போகாத பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்குவது சிறப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் சேமிப்பை நீங்கள் கணிசமாக உயர்த்திக் கொள்ளலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …