ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்திற்கு இது தான் காரணமா..? – தீயாய் பரவும் தகவல்..!

ஐஸ்வர்யா தனுஷ்  : பிரபல நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்களும் உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் சமீபத்தில் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

ஏன் என்றால் நட்சத்திர ஜோடிகளில் எந்த ஒரு கிசுகிசுக்களும் சிக்காத ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் திடீரென விவாகரத்து அறிவித்தது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது,

மட்டுமில்லாமல் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் பின்பு இதனால்தான் விவாகரத்து பெற்றனர் என்று பலரும் பலவிதமான தகவல்கள் பரவின. ஆனால், தற்போது ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

இது குறித்து உண்மை தன்மை என்னவென்று தனுஷ் அல்லது ஐஸ்வர்யா தரப்புதான் விளக்கம் கொடுக்க வேண்டும். அதாவது, நடிகர் தனுஷ் தங்களுடைய பெற்றோர் மற்றும் தன்னுடைய அண்ணன் ஆகியோருக்கு பண உதவி செய்வது ஐஸ்வர்யா தனுஷிற்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

இதுகுறித்து, பலமுறை நடிகர் தனுஷுடம் கூறியும் அவர் தன்னுடைய பெற்றோருக்கு பண உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதுதான் இருவருக்கும் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணம் என கூறுகிறார்கள்.

இந்த தகவலுக்கு வலுசேர்க்கும் விதமாக நடிகர் தனுஷ் தங்களுடைய குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி தனது படம் சம்பந்தபட்ட சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.

அதுவும், குறிப்பாக தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவை அப்பாவை குடும்பத்தினரை காலம் முழுக்க கண்கலங்காமல் பார்த்துக் கொள்வது தான் மாஸ் என்று கூறியிருந்தார்.

தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவுக்கு சூடு வைக்கும் விதமாகத்தான் நடிக்க தனுஷ் இப்படி பேசியிருக்கிறார். இதுநாள் வரை இப்படியெல்லாம் நடிகர் தனுஷ் எந்த பொது மேடையிலும் பேசியது கிடையாது.

தன்னுடைய படங்களை பற்றியும் மற்றும் படத்தில் பணியாற்றிய கலைஞர்களை பற்றி மட்டுமே பேசும் நடிகர் தனுஷ் முதன்முறையாக தன்னுடைய குடும்பத்தினரை பற்றியும் குடும்பத்தினரை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் படியும் பேசியிருந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அதேசமயம், இவரது பேச்சு பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. எனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவரான நடிகர் தனுஷ் அவரது குடும்பத்திற்கு செய்யும் உதவிகள் பிடிக்காததால் ஏற்பட்ட மனக்கசப்பு தான் விவாகரத்து வரை கொண்டு வந்து விட்டதொ என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam