“புதுமையான சுவையில் கோஸ் பீடா பஜ்ஜி..!” – செய்யலாமா?

வாழைக்காய் பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி என்று சாப்பிட்டு போர் அடித்தவர்கள் கோஸ் பீடா பஜ்ஜி செய்து சாப்பிட்டால் படு ஜோராக இருக்கும்.

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கோஸில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இந்த கோசை கொண்டு எப்படி கோஸ் பீடா பஜ்ஜி செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

cabbage bajji

கோஸ் பீடா பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்

1.கோஸ் இலைகள் ஒரு கப்

2.கடலை மாவு ஒரு கப்

3.அரிசி மாவு ஒரு கப்

4.மிளகாய் தூள் சிறிதளவு

5.பெருங்காயத்தூள் சிறிதளவு

6.சமையல் சோடா ஒரு சிட்டிகை

7.உப்பு தேவையான அளவு

8.பொரித்து எடுப்பதற்கு எண்ணெய் அரை லிட்டர்

செய்முறை

முதலில் கோஸ் இலைகளை நன்றாக சுத்தம் செய்ய கழுவிய பிறகு அதன் நடுவில் இருக்கும் நடு நரம்பை எடுத்துவிட்டு பீடாவை மடிப்பது போல நான்காக மடித்துக்கொள்ளுங்கள்.

cabbage bajji

அப்படி மடித்த பிறகு அதன் நடுவில் ஒரு கிராம்பை குத்தி விடவும். பிறகு நீங்கள் கடலை மாவு ,அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், சமையல் சோடா இவற்றையெல்லாம் ஒன்றாக சேர்த்து கட்டி சேராமல் நீரை விட்டு கரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் கரைத்த இந்த கலவையில் நீங்கள் மடித்து வைத்திருக்கும் கோசை நனைத்து எல்லா பகுதிகளிலும் அந்த கரைசல் இருக்கும்படி பார்த்துக்கொண்டு பொறித்தெடுக்க வேண்டும்.

cabbage bajji

இதை பொறித்து எடுக்க தேவையான அளவு எண்ணெயை ஊற்றி கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடான பிறகு முக்கி வைத்திருக்கும். இந்த கோஸ் பீடாவை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும் இப்போது பீடா பஜ்ஜி தயார்.

வித்தியாசமான இந்த பக்தியை உங்கள் வீட்டிலும் செய்து சாப்பிட்டு விட்டு இதன் சுவை எப்படி உள்ளது என்பதை நீங்கள் கூறுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …