“எலும்புகள் வீக்கா இருக்கா… டோன்ட் ஒரி..!” இந்த உணவ ஃபாலோ பண்ணாலே போதும் பலமான எலும்புகள பெறலாம்..!!

 உடலுக்கு உரிய அமைப்பினை கட்டமைத்து கொடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது  எலும்புகள் தான். இந்த எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனிதனுக்கு அதிக அளவு உறுதி கிடைக்கும். மேலும் எந்த ஒரு செயலையும் எளிதாக செய்யக்கூடிய அளவுக்கு மனிதனுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய இந்த எலும்புகள் வீக்காக மாறவிடாமல் நல்ல உறுதியாக இருக்க சில உணவுகளை நாம் அன்றாட உணவில் எடுத்துக் கொண்டாலே போதுமானது.

 அப்படி எலும்பை பலப்படுத்தக் கூடிய உணவு வகைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் அனைவருக்குமே நன்றாக தெரியும் எலும்புகள் பலமாவதற்கு முக்கியமாக கால்சியம் அவசியம் தேவை என்று. இந்த கால்சிய சத்து தான் எலும்புகளின் உறுதிக்கு உறுதுணையாக இருக்கிறது. அப்படிப்பட்ட கால்சியம் நிறைந்த உணவுகள் என்னென்ன என்று தெரியுமா.

 

 பொதுவாக இந்த கால்சிய சத்து பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிக அளவு உள்ளது. அதுமட்டுமல்லாமல் தினமும் முட்டையை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு தேவையான கால்சிய சத்து கிடைத்து விடும்.

 சைவ உணவை உண்பவர்கள் கட்டாயம் ப்ரோக்கோலி, கீரை வகைகள், முட்டை கோஸ் போன்றவற்றை வாரத்தில் இரண்டு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் அதிக அளவு கால்சிய சத்து  கிடைக்கும்.

 அதுமட்டுமல்லாமல் ஓட்ஸ், சோயா, பாதாம் போன்ற பொருட்களில் அதிக அளவு கால்சியம் இருப்பதால் இந்த பொருட்களை நீங்கள் தினமும் எடுத்துக் கொள்வது நல்லது.

 மேலும் கால்சிய சத்து உடலில் ஊடுறுவதற்கு தேவையான முக்கியமான வைட்டமின் டி. இது சூரிய ஒளி மூலம் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம்தான் எலும்புகள் திடப்படும் என்பதை புரிந்து கொண்டு உங்கள் உடலில் சூரியன் படும் அளவுக்கு நடை பயணத்தை மேற்கொள்வது நல்லது.

 இந்த வைட்டமின் டி யை சூரிய ஒளி அல்லாமல் நீங்கள் காளான், முட்டையின் மஞ்சள் கரு, கீரை போன்றவற்றிலிருந்து பெற முடியும். உங்கள் எலும்புகளை பாதுகாக்க வேண்டுமெனில் உங்களுக்கு வைட்டமின் சி சக்தி மிகவும் அவசியமான ஒன்று. இதில் இருக்கும் கொலஜன் எலும்பு மஞ்சைகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

 பொதுவாக சிட்ரஸ் பல வகைகளான ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற புளிப்பு சுவை கொண்ட பழங்களில் அதிக அளவு உள்ளது மேலும் வைட்டமின் கே எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும். எனவே எறும்பு தேய்மானம் எலும்பு பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் குணமாக வைட்டமின் கே அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த வைட்டமின் கே காலிஃப்ளவர் துளசி கொத்தமல்லி போன்றவற்றில் இருப்பதால் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு எலும்பு வளர்ச்சி அதிகரிப்பதோடு தேய்மான தொல்லையும் ஏற்படாது.

30 வயதைக் கடந்த பெண்கள் மெக்னீசிய குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள் அவர்கள் பூசணிக்காய், பூசணிக்காய் விதை, பச்சைக் காய்கறிகள் மற்றும் வாழைப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் எலும்பு தேய்மானத்தை தடுக்கக்கூடிய சத்து உள்ளதால் புரதம் நிறைந்த பொருட்களான பால், ஓட்ஸ் பட்டர், முட்டை போன்றவற்றை உணவில் சேர்க்க மறக்க வேண்டாம்.

எலும்புகளில் ஆடர்த்தியைஅதிகளவு அதிகரிக்க உதவக்கூடிய பாஸ்பர சத்து நிறைந்த அவகேட்டா, திராட்சை, அத்திப்பழம் இறைச்சி போன்றவற்றை உணவில் சேர்த்து எலும்பு பலத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version