காய்ச்சலால் துடிச்சேன்.. ஆனா.. நயன்தாரா இப்படி பண்ணுவாங்கன்னு நெனச்சு கூட பாக்கால.. நடிகை சரண்யா..!

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சரண்யா மோகன்.

கேரளாவை சொந்த ஊராகக் கொண்டிருக்கும் இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

சரண்யா மோகன்:

குறிப்பாக வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். நயன்தாரா மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்து தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் சரண்யா மோகன்.

அந்த திரைப்படத்தில் அவரது கேரக்டர் என்றும் மக்கள் மனதில் பதியும் படியாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது கெரியரை துவங்கினார். தொடர்ந்து ஒரு நாள் கனவு உள்ளிட்ட ஒரு சில திரைப்படத்தில் மட்டுமே குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

நயன்தாராவின் தங்கையாக சரண்யா:

யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம் பேர் விருது மற்றும் விஜய் விருதுகள், சிறந்த துணை நடிகைக்கான விருதுகள் உள்ளிட்டவற்றை பெற்று கவுரவிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார்.

அதை எடுத்து அவருக்கு துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டே இருந்தது .

ஜெயம் கொண்டான், மகேஷ் சரண்யா மற்றும் பலர் , பஞ்சாமிர்தம், ஈரம் , ஆறுமுகம், அழகர்சாமியின் குதிரை , வேலாயுதம் , ஒஸ்தி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.

இதனிடை நடிகை சரண்யா கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட காதலரான டாக்டர் அரவிந்த் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம்:

இவர்களது திருமணம் ஆலப்புழாவில் உள்ள கொட்டாங்குளம் காரா தேவி கோவிலில் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது.

தற்போது இவர்களுக்கு அனந்த பத்மநாதன் அரவிந்த் , அன்னப்பூர்ணா அரவிந்த் என ஒரு மகளும் ஒரு மகளும் இருக்கிறார்கள் .

அப்போதும் குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் க்யூட்டான வீடியோ மற்றும் புகைப்படங்களை சரண்யா தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவார் .

அவ்வப்போது நடனமாடும் வீடியோக்களையும் சரண்யா மேனன் தனது சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நயன்தாரா நடந்துக்கொண்ட விதம்:

இந்நிலையில் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்த போது நயன்தாரா தன்னிடம் நடந்து கொண்ட விதம் பற்றி பேட்டி ஒன்றின் மிகுந்த நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார் .

நான் அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கு பயங்கரமான காய்ச்சல். அப்போது வெண்மேகம் பாடலுக்கான சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது .

உடனே நான் என்னுடைய சூட்டிங் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கே போயிருந்தேன். என்னுடைய காட்சிகளை மட்டும் முடித்துவிட்டு நான் வந்து ஓரமாக சேரில் அமைதியாக அமர்ந்துக் கொள்வேன்.

நயன்தாரா அப்படி பண்ணுவார்னு நினைக்கல:

அந்த சமயத்தில் இதை நோட்டுமிட்ட நடிகை நயன்தாரா என்னிடம் வந்து என்ன ஆயிற்று என கேட்டார். உடனே நான் காய்ச்சல் இருக்கு என்று சொன்னதும் அந்த அந்த இடத்தில் தன்னுடைய அஸிஸ்டன்டை உடனடியாக அனுப்பி வைத்து என்னை அவருடைய கேரவனில் தங்க வைத்தார்.

அது மட்டும் இல்லாமல் சரண்யாவின் காட்சிகள் இருந்தால் மட்டும் அவரை வெளியே அழைத்து வாருங்கள் இல்லையென்றால் அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் எனக் கூறினார் நயன்தாரா .

அது அந்த ஷூட்டிங் நடந்த இடம் முழுக்க கிராமம் என்பதால் அருகில் எங்கேயும் ஹாஸ்பிடல் இல்லை
உடனடியாக ஹாஸ்பிடலுக்கு எங்கேயும் போக முடியாதால் நயன்தாரா தன்னுடைய கேரவன் கொடுத்து என்னை தங்க வைத்தார்.

நான் அவருடன் நடித்தது ஒரு சில காட்சிகள் மட்டும்தான் என்றாலும் அவர் என்னிடம் அப்படி நடந்து கொண்ட விதத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது என சரண்யா மோகன் அந்த பேட்டியில் நயன்தாரா குறித்து மிகுந்த பெருமையோடு பேசி இருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version