“குழந்தைகள் விரும்பும் குடைமிளகாய் சாதம்..!” – ஐந்தே நிமிடத்தில் செய்துவிடலாம்..!

சமையல் செய்ய வேண்டுமே என்று உள்ளுக்குள் எண்ணி.. சோர்வாக  இருப்பது போல உணர்வு ஏற்பட்டால் நீங்கள் விரைவாக உங்கள் வேலைகளை முடித்து விட குடைமிளகாய் சாதம் செய்து விடலாம்.

இந்த குடைமிளகாய் சாதம் சிறுவர்கள் விரும்பி உண்ணக்கூடிய வகையில் இருக்கும் என்பதால் நீங்கள் அதை எளிதில் செய்து ஓய்வு எடுக்கலாம்.

அப்படிப்பட்ட எளிமையான குழந்தைகள் விரும்பும் குடைமிளகாய் சாதம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

குடைமிளகாய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்

1.பாசுமதி அரிசி ஒரு கப்

2.குடைமிளகாய் நான்கு

3.கரம் மசாலா ஒரு டேபிள் ஸ்பூன்

4.வெங்காயம் ஒன்று

5.உப்பு

மசாலாவிற்கு தேவையான பொருட்கள்

6.உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்

7.கொத்தமல்லி 2 டீஸ்பூன்

8.சீரகம் ஒரு டீஸ்பூன்

9.காய்ந்த மிளகாய் 4

தாளிக்க தேவையான பொருட்கள்

10.எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

11.கடுகு ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

 முதலில் பாசுமதி அரிசியை ஊறவைத்து குக்கரில் போதுமான அளவு நீரை விட்டு வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து குடைமிளகாயை கழுவி நன்கு நறுக்கிக் கொள்ளவும். பிறகு நீங்கள் வாணலியில் எண்ணெயை விட்டு அரைக்க வேண்டிய மசாலா பொருட்களை போட்டு வறுத்து அதனை ஒரு தட்டத்தில் வைத்து சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் நீங்கள் மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன் நிறமாக வறுபட்ட பிறகு நீங்கள் குடைமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.

குடைமிளகாயை சேர்த்து வதக்கும்போது அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி அதனோடு சேர்த்து மீண்டும் இழக்கி விடவும். இதனைத் தொடர்ந்து நீங்கள் கரம் மசாலாவையும் போட்டு நன்கு மசாலா வடை நீங்கும் வரை இளக்குகள் இப்போது போதுமான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளலாம்.

இனி இந்த கலவையோடு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் சாதத்தையும் போட்டு நன்கு கலக்கி உப்பிருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துவிட்டு உப்பு குறைவாக இருந்தால் உப்பினை சேர்த்து விட்டு கொத்தமல்லியை தூவி இறக்கி விடுங்கள். இப்போது சூப்பரான சுவையான குடைமிளகாய் சாதம் அருமையாக தயாராகி விட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …