உக்காந்து பேசிட்டு இருக்கும் போதே இதை பண்ணுவார்.. கேப்டன் மறுபக்கத்தை உடைத்த நடிகை சீதா..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த் பற்றி அனைவருக்கும் நினைவில் இருக்கும். கருப்பு எம்ஜிஆர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மதுரை மாவட்டத்தில் இருந்து சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தவர்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்த இவரின் இயற்பெயர் விஜயராஜ் என்பதாகும். இவர் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  ஹீரோவாக நடித்திருக்கிறார்.

கேப்டன் விஜயகாந்த்..

கலியுக கர்ணனாக வர்ணிக்கப்படும் விஜயகாந்த் பசி என்று வருபவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் உணவினை அள்ளிக் கொடுத்த வள்ளலாக திகழ்கிறார். இவர் 1984 ஆம் ஆண்டு வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். 

மேலும் இவரது நடிப்பில் வெளி வந்த அம்மன் கோவில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, சின்ன கவுண்டர், ஹானஸ்ட் ராஜ், தாயகம், வானத்தைப் போல போன்ற படங்கள் திரையுலகம் உள்ள வரை கேப்டனின் புகழ் பாடக்கூடிய வகையில் இருக்கும்.

கேப்டன் விஜயகாந்த் இரண்டு முறை பிலிம்பேர் விருதையும், மூன்று முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் பெற்றிருக்கக் கூடிய இவர் தமிழ்நாட்டின் உயரிய விருதான கலை மாமணி விருதையும் பெற்றெடுக்கிறார்.

இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்த இவர் தனியாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை 2005 -இல் நிறுவிய பிறகு 2006 முதல் 2016 வரை விருத்தாச்சலம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளில் ஒரு முறை வெற்றி பெற்று இருக்கிறார்.

விஜயகாந்த் பற்றி நடிகை சீதா சொன்ன விஷயம்..

திரை உலகில் இன்று வரை கேப்டனாக விளங்கும் விஜயகாந்த் அண்மையில் நம்மை விட்டு மறைந்து சென்றிருந்தாலும் அவர் செய்த நல்ல விஷயங்கள் இன்னும் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தாரும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

மேலும் விஜயகாந்த் என்றாலே பலரும் அவருடைய புகழையும் அவரது மனித நேயத்தையும் மிகச் சிறப்பான முறையில் பேசுவார்கள். அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை சீதா கேப்டன் பற்றி பேசிய பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் பல்வேறு வகைகளில் பன்முகத் திறமையை கொண்டிருக்கும் கேப்டன் விஜயகாந்த் மிகச்சிறந்த ஜோதிடர் என சீதா சொல்லி ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

 இதற்கு காரணம் அவரோடு இணைந்து நடித்த படங்களில் இருவரும் செட்டில் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது சீதாவிடம் அவரது ராசி, நட்சத்திரம் பற்றி எல்லாம் கேட்டு அதற்குரிய பலனை சொல்வாராம்.

ஜோதிடம் பார்த்தாரா விஜயகாந்த்..

இதனை அடுத்து மிகச்சிறந்த ஜோதிடராக விஜயகாந்த்தை சொல்லி இருக்கும் நடிகை சீதா இது பற்றி மற்றவர்களுக்கு தெரியுமோ? என்னமோ? தெரியவில்லை. ஆனால் தனக்கு அவர் மிகச் சிறப்பான கணிப்புகளை தந்து இருப்பதாக சொல்லிவிட்டார்.

கேப்டன் விஜயகாந்த்தை நடிகராக, அரசியல்வாதியாக பலருக்கும் தெரியும். ஆனால், அவர் கைதேர்ந்த ஜோதிடர் என்பது சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சீதா கொடுத்துள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் விஜயகாந்த்துக்கு இப்படிப்பட்ட திறமை இருந்ததா? இது பற்றி இது வரை கேள்விப்படவில்லையே என்ற வகையில் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையங்களில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version