ஏழைகளின் எல்லை காவலன் மதுரை வீர சாமி.. விஜயகாந்த் நடந்து வந்த பாதை..!! கண்ணீரில் தமிழகம்..!

எப்படியும் வாழலாம் என்று நினைக்கும் மக்களின் மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று தனது வாழ்க்கை முறையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக மாற்றி இருக்கும் ஒரு அற்புதமான மனிதர் தான் கேப்டன் என்று பாசத்தோடு அழைக்கப்படும் விஜயகாந்த்.

ஒரு தனி மனிதனின் இறப்புக்காக நாடு அழுதால் அவன் தான் நல்ல தலைவன். அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் உயிர் நீத்த துயர செய்தியை கேட்டு தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது.

தற்போது அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் சென்னையில் இருக்கும் கோயம்பேடு பகுதியே மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்துப் போய் உள்ளது.

அப்படிப்பட்ட ஒரு பெரும் கலைஞர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது என்பதை பற்றிய பதிவை இந்த பதிவில் காணலாம். இந்த மாமனிதர் அழகர்சாமி மற்றும் ஆண்டாள் என்பவருக்கு பிறந்தவர். சினிமாவின் மீது கொண்ட அதீத காதலால் சென்னைக்கு வந்தார்.

1979-ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த விஜயகாந்த் தன் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் முன்னேறி ரஜினி மற்றும் கமலுக்கு நிகரான அந்தஸ்தை மக்கள் மத்தியில் பெற்று விட்டார்.

எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்ட இவரை அனைவரும் அன்போடு கேப்டன் என்று அழைத்ததோடு, இவரது கொள்கைகளைப் பார்த்து வியந்தார்கள். அனைவரும் சமம் என்று வாய் அளவில் சொல்லாமல் சாப்பிடும் உணவை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பசியால் வாடியவர்களின் துயரம் அறிந்து பசியை போக்கியவர்.

சினிமா உலகில் தான் மற்றும் வெற்றி பெற்றால் போதும் என்று எண்ண கூடியவர்களின் மத்தியில் இன்று சூப்பர் ஸ்டார் ஆக மின்னும் விஜய், சூர்யா, வடிவேலு போன்றவர்களை கை கொடுத்து தூக்கி விட்ட அற்புதக் கலைஞர்.

ஒரே ஆண்டில் 18 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிசியான நடிகராக விளங்கியவர். இவர் நடிப்பில் வெளி வந்த வைதேகி காத்திருந்தால், வானத்தைப்போல, கேப்டன் பிரபாகரன், ரமணா போன்ற படங்கள் ஒவ்வொன்றும் சினிமா உலகம் இருக்கும் வரை இவர் பெயர் சொல்லும்.

இவரது புகழுக்கு மகுடம் சேர்ப்பது போல 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று பல வெளிநாடுகளுக்கு கலைஞர்களை அழைத்துச் சென்று, கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தவர்.

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று சினிமாவோடு தனது வாழ்க்கையை நிறுத்தி விடாமல், அரசியலில் களம் இறங்கி தேமுதிக கட்சியை ஆரம்பித்து ஒரே ஆண்டில் விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களில் வெற்றியைப் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் இவர் அரசியலில் என்ன செய்யப் போகிறார் என்று பேசியவர்களின் வாயை அடக்கும்படி, 29 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து அரசியல் சரித்திரம் படைத்தார்.

அப்படிப்பட்ட மகான் உடல் நலக்குறைவால் இன்று நம்மை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை வேண்டுவோம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *