அடியாத்தி இது என்ன ஃபீல்லு என்று கேட்கக் கூடிய அளவிற்கு வீட்டில் இருக்கும் ஒரு கேரட்டை வைத்துக் கொண்டு கோல்டன் பேசியல் செய்து உங்கள் முகத்தை மினுமினு என மாற்றம் முடியும்.
இதற்காக இனி நீங்கள் பணத்தை அதிகளவு செய்து பார்லருக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருந்தபடியே இந்த பேசியலை எப்படி நேர்த்தியாக செய்வது என்பதை இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் இந்த பேசியல் செய்வதற்கு தேவையான கேரக்டை நன்கு கழுவி விட்டு துருவியில் நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் எந்த துருவிய கேரட்டில் இருந்து கேரட் சாறை நன்கு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாறை வைத்துக்கொண்டு தான் நாம் பேசியல் பேக்கை செய்யப் போகிறோம்.
எனவே இந்த கோல்டன் பேசியல் பேக்கை செய்வதற்கு முன்பு உங்கள் முகத்தை கிளின்சிங் செய்து விடுங்கள். வீட்டிலேயே தான் நீங்கள் தயார் செய்த பொருளை கொண்டு கிளின்சிங் செய்கிறீர்கள்.
இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ் இரண்டையும் நன்றாக கட்டியில்லாமல் கலந்து உங்கள் முகத்தில் இரண்டு நிமிடங்கள் அப்படியே தேய்த்து மசாஜ் செய்து விடவும். இதனை அடுத்து காட்டன் பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரைக் கொண்டு உங்கள் முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும்
இதனை செய்வதால் முகத்தில் படிந்திருக்கும் தூசு அழுக்குகள் வெளியேறிவிடும். இதனை அடுத்து ஸ்கிரப் செய்வதற்காக ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் இதே கேரட் சாறு ஒரு டேபிள் ஸ்பூன் சிறிதளவு சர்க்கரையும் கலந்து கொண்டு உங்கள் நிமிடத்தில் இந்த கரைசலை தேய்த்து மிக நேர்த்தியான முறையில் சிறிதாக முகம் முழுவதும் தேய்த்து விடவும்.
இதன் மூலம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் கருப்பு நிறத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கூட இதன் மூலம் நீங்கவாய்ப்புகள் உள்ளது. உங்கள் முகத்தில் அதிக முகப்பருக்கள் இருந்தால் எந்த ஸ்க்ரபிங்கை நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.
இனி நீங்கள் உங்கள் பேஸ்பேக்கை தயார் செய்ய ஒரு பவுலில் சிறிதளவு தயிர், சிறிதளவு கடலை மாவு, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் கேரட் ஜூஸ் இதை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். கலந்த இந்த கலவையை உங்கள் முகத்தில் தேய்த்து இரண்டு நிமிடம் வரை மெதுவாக மசாஜ் செய்து கொடுங்கள்.
பிறகு இந்த ஃபேஸ் பேக்கை பத்து நிமிடங்கள் காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். இந்த பேஸ் பேக் காய்ந்த பிறகு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி எடுங்கள்.
இப்போது உங்களை நீங்கள் உங்கள் கண்ணாடியில் பார்க்கும்போது உங்கள் முகம் சற்று பளபளப்பாகவும் வெள்ளை நிறத்தோடும் இருப்பதை நீங்கள் உணர முடியும் இதனை அடுத்து மாய்சரைசர் ஏதேனும் இருந்தால் அதை லைட்டாக தேய்த்து விடுங்கள். அப்படி மாயசரஸ் இல்லை என்றால் கவலை வேண்டாம் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயை உங்கள் கைகளில் நன்கு தேய்த்துக் கொண்டு அப்படியே முகத்தில் அப்ளை செய்து விட்டால் போதுமானது.
மாதத்தில் மூன்று முதல் நான்கு ஐந்து முறை இந்த தேர்ச்சி அடை செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் முகம் ஹாலிவுட் நடிகைகளை விட அழகில் ஜொலிக்கும்.