கேத்ரீன் தெரேசா : தெலுங்கில் வெளியான பிம்பிசாரா என்ற திரைப்படம் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை கேத்ரீன் தெரேசா.
தமிழில் மெட்ராஸ், கதகளி, கலகலப்பு-2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருக்கும் இவர் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.
அவர் என்னை மாதிரியே நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும்.. கொஞ்சம் உயரமாகவும் பிட்டாகவும் இருக்க வேண்டும். என குறிப்பிட்டு இருக்கிறார் நடிகை கேத்தரின் தெரேசா.
மேலும் பில் கிளின்டன் என்றால் மிகவும் பிடிக்குமாம். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
மேலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் பல நடிகைகளைப் போல சுற்றுலா சென்ற இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக செய்து வருகிறார்.
ஏனென்றால் சுற்றுலா செல்வது நான் என்னை ஓய்வாக வைத்துக் கொள்வது தானே தவிர அங்கே சென்று புகைப்படங்கள் எடுப்பது என்னுடைய ஓய்வு கிடைக்க கூடிய விஷயமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே சுற்றுலா செல்லும் பொழுது அங்கு இருக்கக்கூடிய வாழ்க்கை முறை மற்றும் அங்கு இருக்கக்கூடிய சூழலை ரசிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அந்த வேலையை நான் தவறாமல் செய்வேன்.
எங்கு சுற்றுலா சென்றாலும் அங்கிருக்கும் கட்டிடங்கள் அங்கு இருக்கும் சுற்றுச்சூழல் இவற்றையெல்லாம் நான் பார்க்க மாட்டேன். அங்கே பழகக் கூடிய மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்.. அவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது.. என்பதை பார்த்து தெரிந்து அதிகம் விரும்புவேன் என்று பதிவு செய்திருந்தார் நடிகை கேதரின் தெரசா. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.