காலி ஃப்ளவர் இலையில் இம்புட்டு சத்தா..? – இத்தனை நாள் தெரியாம தூக்கி போட்டுட்டோமே..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய காய்களில் ஒன்றாக திகழ்வதுதான் காலிப்ளவர். இந்த காலிபிளவரில் தற்போது இருக்கக்கூடிய பிள்ளைகள் அனைவரும் காலிஃப்ளவர் சில்லி என்றால் ஒரு பிடி பிடிப்பார்கள்.

அந்த காலிபிளவரின் கீழ் இருக்கும் இலைகளை இதுவரை நாம் அனைவருமே வெட்டி வெளியே தூர போட்டு விடுவோம். ஆனால் அதில் நிறைய சத்துக்கள் உள்ளது என்பதை எத்தனை பேருக்கு தெரியும். அப்படி தெரிந்தால் நிச்சியம் நீங்கள் அதை கீரை போல உணவில் கட்டாயம் சமைத்து சேர்த்துக் கொள்வீர்கள்.

காலிஃப்ளவர் இலையில் உள்ள சத்துக்கள்

👍காலிபிளவர் இலையில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் மினரல் சத்துக்கள் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை இது கொடுக்கிறது.

👍இந்த சத்து குழந்தையின் எடையை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் உயரத்தை அதிகரிக்க உகந்த ஒன்றாக இருப்பதால் குழந்தைகளுக்கு தரக்கூடிய உணவு இதை கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.

👍மேலும் இது குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் வழி செய்கிறது.

👍 காலிஃப்ளவர் இலைகளில் நிறைந்து காணப்படும் பைபர் சத்து சக்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. எனவே இந்த இலைகளை சூப் அல்லது சாலடுகளில் சேர்த்து உண்ணும்போது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

👍காலிஃப்ளவரில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ கண்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருவதால் கண்ணோய் ஏற்படுவதை தடுக்கிறது. மற்றும் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ சீரம் ரெட்டினோல் அளவை திறம்பட உயர்த்துகிறது மாலைக்கண் நோய் ஏற்படாது.

 👍நல்ல ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களை அதிகளவு கொண்டிருக்க கூடிய காலிஃப்ளவர் இலைகள் மன அழுத்தில் இருந்து நம்மை பாதுகாப்பதால் கட்டாயம் நீங்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

👍இன்று பெண்களுக்கு தேவையான கால்சியம் சத்து  இதில் அதிக அளவு  இருப்பதால் இந்த இலைகளை தூரப் போடாமல் நீங்கள் சமைத்து உண்ணலாம். இதன் மூலம் உங்களுக்கு கால்சிய சத்து அதிக அளவு கிடைப்பதால் உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

👍 மேலும் போஸ்ட் மெனோபாஸை எதிர்கொள்ள கூடிய பெண்களுக்கு தேவையான கால்சியம் முழுவதும் இந்த தூக்கிப் போடும் இலைகளிலிருந்து கிடைக்க விடுகிறது. 100 கிராம் அளவில் இருக்கும் காலிஃப்ளவர் இலையில் இரும்பு சத்து அதிக அளவு உள்ளது.

👍 இதில் 40 மில்லி கிராம் அளவு இருப்பதால் கட்டாயம் இதை நீங்கள் சமைத்து உண்ணலாம். அது போலவே பாஸ்பர சத்தும் இரண்டு மடங்கு மற்ற காய்கறிகளை கம்பேர் செய்யும் போது இதில் அதிக அளவு காணப்படுகிறது.

 எனவே நீங்கள் காலிஃப்ளவரை வாங்கும் போது எடை அதிகரிக்கும் என்று நினைத்து அந்த இலைகளை உடைத்து அப்படியே தூர போடாமல் அப்படியே வீட்டுக்கு வாங்கி வந்து அந்த இலைகளையும் சமைத்து உண்ணுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam