நட்சத்திரங்கள் பலர் ஒருவருக்கொருவர் சொந்தமாக இருந்தாலும் கூட அதை பொதுவெளியில் காட்டிக் கொள்ளாமல் தான் உண்டு தாங்கள் வேலை உண்டு என இருப்பார்கள்.
வாய்ப்புக்காக கூட அடுத்தவர் சொந்தக்காரர் முன் போய் நிற்கவே மாட்டார்கள். அப்படிப்பட்ட நடிகர் யார் யார் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பாடகர் எஸ் என் சுரேந்தர் – நடிகர் விஜய்:
நடிகர் விஜய்யின் தாய்மாமன் தான் பாடகர் எஸ் என் சுரேந்தர். நடிகர் மோகன் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களுக்கும் பெரும்பாலும் இவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
முரளி – டேனியல் பாலாஜி:
அடுத்ததாக வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி. மறைந்த நடிகர் ஆன முரளியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
இது பலருக்கும் தெரியாத விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த உறவு எப்படி என்றால் டேனியல் பாலாஜி அம்மாவும் முரளியின் அம்மாவும் உடன் பிறந்த சகோதரிகள்.
ஒன்றுவிட்ட தம்பிகளாக இருந்து வந்தார்கள். முரளியின் அப்பா கன்னடகாரர், டேனியல் பாலாஜியின் அப்பா தெலுங்கு காரர்.
இவர் கடைசி வரை வில்லன் நடிகராகவே இருந்து பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் கூட மிகப்பெரிய நடிகராக பிரபலமாகாமல் இருந்துவந்தார்.
ஆனாலும் டேனியல் பாலாஜி ஒரு இடத்தில் கூட தனது அண்ணன் ஆன முரளியிடம் சென்று பட வாய்ப்பு கேட்டதே இல்லை .
அவ்வளவு ஏன் அவரை சந்திப்பதையே நான் நிறுத்திவிட்டேன். சந்திக்க சென்றால் கூட வாய்ப்புக்காக வருகிறேன் என நினைத்து விடக்கூடாது.
அதனால் அண்ணன் முரளியை சந்திப்பது கூட நான் மறுத்துவிட்டேன் என டேனியல் பாலாஜி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அண்மையில் இவர் மாரடைப்பு காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விக்ரம் – இயக்குனர் தியாகராஜன்:
நடிகர் விக்ரமின் தாய் மாமன் தான் பிரசாந்தின் அப்பா தியாகராஜன். தியாகராஜன் குடும்பம் ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட குடும்பமாக இருந்து வந்தது.
அவரது மகன் பிரசாந்த் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வந்தார்.
அப்படியான ஒரு சமயத்தில்தான் விக்ரம் பிரசாந்தின் வீட்டிற்கு சென்று வாய்ப்பு ஒன்று கேட்டாராம். ஆனால் முகத்தில் அடித்தார் போல் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் தியாகராஜன் குடும்பம்.
பின்னாலில் விக்ரம் அவர்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு நட்சத்திர நடிகராக உயர்ந்துவிட்டார்.
இன்று தியாகராஜனின் மகன் பிரசாந்த்தோ அட்ரஸ் இல்லாமல் சைட் ஆக்டராக நடித்து வருகிறார்.
நடிகர் விக்ராந்த் – விஜய்:
நடிகர் விஜய்யின் தம்பி தான் விக்ராந்த். இவர் இவர் விஜய்யின் தம்பி என்பதால் எந்த படத்தில் நடிக்க கமிட்டானாலும் அண்ணன் விஜய்யை உங்களது படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு வர சொல்ல முடியுமா ?
விஜய் உங்கள் படத்தின் ப்ரோமோஷன்காக வர சொல்ல முடியுமா?என இவர் நடிக்கும் படத்தில் விஜய்யை தான் பெரிதும் எதிர் பார்ப்பார்களாம்.
அப்படி விஜய் வந்துவிட்டால் உங்களது படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என இயக்குனர்களும் தயாரிப்பாளரும் நம்பிக் கொண்டிருந்தார்களாம்.
விக்ராந்தை படத்தில் கமிட் செய்தாலே உங்கள் அண்ணன் விஜய்யை எப்படியாவது இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிக்க வைக்க முடியுமா என கேட்பார்களாம்.
இதனால் பல படங்களை விக்ராந்த் நிராகரித்திருக்கிறார். இதுபோன்று பல இயக்குனர் தயாரிப்பாளர்கள் கேட்டு வந்ததால் இவர் பல படங்களை நிராகரிக்கவும் செய்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் – பவானி ஸ்ரீ:
இசை ஜாம்பவான் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆன ஜிவி பிரகாஷின் தங்கைதான் விடுதலை திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்த பவானி ஸ்ரீ.
இவர் இப்படத்திற்கு முன்னதாக கா.பெ ரணசிங்கம், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களில் ஒரு முக்கிய ரோலில் நடித்தார்.
அதன் பின்னர் ஹீரோயின் ஆனது குறிப்பிடத்தக்கது. பவானி ஸ்ரீ நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தான் நடிக்க வேண்டும் என விருப்பப்பட்டு திரைத்துறைக்கு வந்ததாக அவரது குடும்பத்தினரும் அவரது அம்மாவும் பேட்டியில் கூறினார்கள்.
சந்தான பாரதி – ஆர் எஸ் சிவாஜி:
இயக்குனரும் நடிகரும் ஆன சந்தான பாரதி. காமெடி நடிகரான ஆர் எஸ் சிவாஜியின் கூடப்பிறந்த சகோதரர்கள். ஆனால் இளிவரல் எங்கும் சொல்லிக்கொண்டதில்லை.
இப்படி தான் பல நட்சத்திர பிரபலங்கள் ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் கூட அதை எந்த ஒரு இடத்திலும் மிக வெளிகாட்டியதே கிடையாது.
இப்படி சில பேர் தங்களது உறவை கூட ரகசியமாக வைத்துக் கொண்டு தங்களின் திறமையை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் நடிகர்களாக இருந்து வருகிறார்கள்.