இந்த போட்டோவில் இருக்கும் முன்னணி நடிகை யாருன்னு தெரியுதா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

கடந்த சில நாட்களாகவே நடிகர், நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நட்சத்திரங்களின் குழந்தை பருவ புகைப்படங்களை நெட்டிசன்ஸ் இணையதளங்கள் முழுக்க வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அழகி To ஹீரோயின்:

அந்த வகையில் பல்வேறு நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகையாக இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா ஹெக்டேவின் குழந்தை பருவ புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகிய வியப்பை ஏற்படுத்துகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து அவரா இவர்? என வியந்து கமெண்ட் செய்து இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்படுபவர் பூஜா ஹிட்டே.

இவர் முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி 2019 ஆம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. முதன்முதலில் தமிழ் சினிமாவின் முத்தான இயக்குனர்களுள் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தெலுங்கு சினிமாவில் உச்சம் தொட்ட பூஜா ஹெக்டே:

இந்த படம் தான் அவரை திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமாகியது. அந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை.

இவரது நடிப்பிற்கான அங்கீகாரத்தையும் முகமூடி திரைப்படம் கொடுக்கவில்லை. இதனால் அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் போனது.

பின்னர் தெலுங்கில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க அங்கு தொட்டதெல்லாம் ஹீட்டு என்ற வகையில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.

மீண்டும் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே இந்தி படங்களிலும் அவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் பூஜா ஹெக்டே.

அவரின் கைவசம் தொடர்ச்சியாக படங்கள் வைத்திருக்கிறார். இதனிடையே எப்போதும் தனது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்.

தனது குடும்பத்தினரோடு மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு கவர்ச்சியாக எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

அன்னையர் தின வாழ்த்து:

இந்நிலையில் நேற்று மே 12ம் தேதி உலக முழுக்க அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அதற்காக பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் தங்களது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரும் கவனத்தையும் ஈர்த்து வந்த நிலையில் பூஜா ஹெக்டேவும் தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து கூறியிருந்தார்.

அந்த பதிவில் , இந்த புகைப்படம் என் அம்மாவின் 2வது கணினி தரவு பயிற்சி மையத்தின் திறப்பு பூஜையில் எடுக்கப்பட்டது.

அம்மா தினமும் சேலையை உடுத்திக்கொண்டு, உதட்டுச்சாயத்தை நாங்கள் குழப்பிவிடாமல் இருக்க flying kiss கொடுத்துவிட்டு வியாபாரத்தை புறப்பட்டு போவார்.

மக்களுக்குக் கல்வி கற்பித்து 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சிறந்த முதலாளியாக மாறுவதை நான் பிரமிப்புடன் பார்த்தேன்.

குழந்தைப்பருவ புகைப்படம் வைரல்:

எங்கள் Superwoman…பெரும்பாலான தாய்மார்களைப் போலவே வேலை மற்றும் வீட்டு வேலைகளை செய்வார்.

நான் அம்மாவைப் போலவே இருக்க விரும்பினேன். #பொஸ்லேடி #சூப்பர் அம்மாக்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வெளியாக பூஜா கேட்டுவின் புகைப்படம் அனைவரது பூஜா ஹெக்டேவின் குழந்தை பருவ புகைப்படம் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version