“அவ அந்த மாதிரி” பைத்தியமுனு வெச்சுக்கோங்க.. சீக்ரெட்டை உடைத்த கயல் சீரியல் நாயகி..

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான கயல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் ஒரு பெண் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தக்கூடிய சீரியலாகவும் விளங்குகிறது.

இந்த சீரியலில் அப்பா இல்லாமல் வளரக்கூடிய குடும்பத்தில் ஒரு பெண் தன் குடும்பத்தை எப்படி உயர்த்த துடிக்கிறார் அதற்காக படும் கஷ்டங்கள் அந்த குடும்பத்தை அடக்க நினைக்கும் உறவுகள் பற்றி மிக அற்புதமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.

“அவ அது மாதிரி” பைத்தியமுனு வெச்சிக்கங்க..

இந்த சீரியலில் கயலாக நடிக்கும் சைத்ரா ரெட்டி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் தன் குடும்பத்தை பாதுகாக்க பல்வேறு வகைகளில் போராடி வருகிறார். அத்தோடு பெண்களுக்கு உரிய அத்துணை ஆசைகளும் இருந்தாலும் அதை ஒரு பக்கத்தில் ஓரமாக வைத்துக் கொண்டு குடும்ப நலனை பெரிதாக பார்க்கக் கூடிய கேரக்டரில் பக்குவமாக நடித்திருக்கிறார்.

வாழ்க்கை என்றால் போராட்டம் இருக்கும் எனினும் வேலை செய்யும் இடத்தில் அளிக்கப்படும் தொல்லைகள் இன்று எல்லாத்துறையிலும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

அந்த வகையில் கயலாக நடித்திருக்கும் சைத்ரா ரெட்டி இந்த சீரியலில் பக்குவமான நடிப்பினை காட்டி தனது ரசிகர்களை அதிகரித்து இருப்பதோடு அடிக்கடி சமூக வலைதள பக்கங்களிலும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்று இவர் பேசும் போது அவ அந்த மாதிரி பைத்தியம் என்று நடிகை ஒருவரை குறிப்பிட்டு சொல்லி அனைவரையும் ஷாக்கில் தள்ளிவிட்டார். இதனை அடுத்து எதற்காக அந்த நடிகையை இவர் இப்படி கூறினார் என்று ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சீக்ரெட்டை உடைத்த கயல் சீரியல் நாயகி..

இவர் தனது தோழியான ஸ்ரேயாவை தான் அப்படி அது மாதிரியான பைத்தியம் என்று கூறி இருக்கிறார். இதற்கு காரணம் அவர் எங்கு சென்றாலும் மேக்கப் இல்லாமல் செல்ல மாட்டார். மேக்கப் இல்லாமலேயே மிக அழகியாக தோன்றக்கூடிய ஸ்ரேயா எங்கு சென்றாலும் லேசாக ஐ ஷேடோ மற்றும் லிப்ஸ்டிக் போடாமல் செல்ல மாட்டார்.

இந்த விஷயத்தை நான் பலமுறை அவளிடம் தெரிவித்திருக்கிறேன் நீ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறாய். அதுவும் மேக்கப் இல்லாமலேயே மிகவும் சிறப்பாக இருக்கிறாய் என்றாலும் அவர் ஐ ஷேடோ மற்றும் லிப்ஸ்டிக்கை தவிர்க்க மாட்டார்.

 

இதை அடுத்து அவர் எனக்கு பதில் சொல்லும் போது இல்ல என்று சொல்லுவாள். எனவேதான் நான் அவளை மேக்கப் பைத்தியம் என்று சொல்லுவதாக சொல்லி அனைவரையும் அதிரவிட்டார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அத்தோடு அவ்வளவு மேக்கப் இல்லாமலேயே ஸ்ரேயா பார்ப்பதற்கு அப்படி லட்சணமாக இருப்பார்களா? என்று ரசிகர்கள் பலரும் கயல் நாயகியிடம் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version