“பார்த்ததும் நாக்கில் எச்சிலை வர வைக்கும்..!” – கேரளத்து சக்கை வரட்டி ..!

மார்ச் மாதம் வந்து விட்டாலே மாம்பழம் மற்றும் பலாப்பழ சீசன் கலைக்கட்ட ஆரம்பித்து விடும். அதிலும் இனிப்பான பலாப்பழம் என்றால் திகட்டாமல் எவ்வளவு வேண்டுமென்றாலும் திங்கலாம் என்று நம் மனது எண்ணும். அப்படிப்பட்ட பலாப்பழத்தைக் கொண்டு கேரளாவில் செய்யக்கூடிய சக்கை வரட்டியை எப்படி செய்யலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சக்கை வரட்டி செய்ய தேவையான பொருட்கள்

1.பலாப்பழம் அரை கிலோ 2.வெல்லம் முக்கால் கிலோ

3.நெய் அரை லிட்டர்

செய்முறை

முதலில் பலாப்பழத்தை நன்கு ஆய்ந்து கொட்டைகளை எல்லாம் எடுத்துவிட்டு சகுனி ஏதும் இல்லாமல் பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து நீங்கள் இதை ஒரு குக்கரில் போட்டு மூன்று முதல் நான்கு விசில் வரை விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இப்போது எடுத்து வைத்திருக்கும் வெல்லத்தை நன்கு இடித்து பொடி பொடியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடி கனமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் பாதி அளவு நெய்யை ஊற்றிய பின் அரைத்து வைத்திருக்கும் அந்த கலவையை போட்ட பின்னர் பொடி பொடியாக உடைத்து வைத்திருக்கும் வெல்லத்தையும் சேர்த்து நன்கு இளக்க வேண்டும்.

இதனை அடுத்து சக்கையும்,வெல்லமும் ஒன்றாக சேர்ந்து நன்கு சேர்த்து வரும்பொழுது அதை சுருட்டி எடுக்க வேண்டும். தேவையான போது அவ்வப்போது அது சுருள தேவையான அளவு நெய்யை நீங்கள் உடனுக்குடன் விட்டு வாருங்கள்.இதனை கட்டி சேராமல் இளக்குவது மிகவும் முக்கியமான விஷயமாகும்.

இந்த கலவையானது நன்கு சுருண்டு பிரவுன் நிறத்திற்கு வரை சுருட்டி எடுங்கள்.இப்போது சூடான சக்கை வரட்டி தயார். இந்த இனிப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு வருடம் ஆனாலும் இது கெட்டுப் போகாது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …