குழந்தை பிறக்கணும்னா தம்பதிகள் உடல் ரீதியாக இப்படி இருக்கணும்.. நடிகை சாந்தினி விளாசல்..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நடிகை சாந்தினி தற்போது குழந்தை பிறக்கனும்னா தம்பதிகள் உடல் ரீதியாக எப்படி இருக்கணும் என்ற கருத்தை வெளியிட்டு இணையத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேலும் தற்போது குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய வேளையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய விஷயங்கள் பரபரப்பாக இணையவாசிகளால் படிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

நடிகை சாந்தினி..

நடிகை சாந்தினி 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜின் சித்து பிளஸ் 2 என்ற திரைப்படத்தில் அறிமுகமாக இருந்தார். இதனை அடுத்து 2013 ஆண்டு நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் நடித்து தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சென்னையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டிகளில் கலந்து கொண்ட இவர், 2009 ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரைத்துறை வாய்ப்பை பெற்றவர்.

முதல் படத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறாதவர் கவன், வஞ்சகர் உலகம், கண்ணுல காச காட்டப்பா, எட்டுத்திக்கும் பற, என்னோடு விளையாடு, காதல் முன்னேற்ற கழகம், மைடியர் லிசா, வில் அம்பு, பில்லா பாண்டி, பலூன், நையப்புடை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது சீரியல்களில் இல்லத்தரசிகள் விரும்பக்கூடிய நல்ல நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

சின்னத்திரை சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் கிளாமர் தேவையாக இருக்கக்கூடிய பட்சத்தில் கிளமரை காட்டவும் தயங்காத இவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை போட்டு அனைவரையும் ரணகளப்படுத்தி விடுவார்.

குழந்தை பிறக்கணும்னா..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் குழந்தை இல்லாத தம்பதிகளை குழந்தை இல்லையா? என்று கேட்டு இரிட்டேட் செய்யக்கூடிய விஷயத்தைப் பற்றி மிகவும் சிறப்பான முறையில் பேசி இருக்கிறார்.

அது பற்றி அவர் கூறுகையில் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் தம்பதிகள் உடல் ரீதியாக அதற்கு தயாராக வேண்டும். அது இயற்கையாக நடக்க வேண்டும் என்று கூறியதோடு குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு தம்பதியரை பொறுத்து மாறுபடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் குழந்தையைப் பெற்றுக் கொள்ள உடல் ரீதியாக அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் தயாராக வேண்டும்.

குழந்தை பெற்றுக் கொள்ளாததற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். அவர்களிடம் போய் ஏன் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று கேட்பது அந்த தம்பதிகள் மத்தியில் ஒரு விதமான மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியது.

இதனைப் புரிந்து கொள்ளாமல் பலரும் ஆர்வத்தோடு இந்த கேள்விகளை கேட்கிறார்கள் இது போல என்னிடம் கேள்வி கேட்பவரிடம் சிரித்து விட்டு நான் அவர்களை விட்டு கடந்து சென்று விடுவேன். தற்போது என்னிடம் அதுபோன்ற கேள்விகளை யாரும் எழுப்புவது கிடையாது என பேசி இருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

இதைக் கேட்டு ரசிகர்கள் அனைவரும் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் இவ்வளவு விஷயங்கள் அதுவும் தம்பதிகள் உடல் ரீதியாக எப்படி இருக்க வேண்டும் என்று மிக நேர்த்தியான முறையில் நடிகை சாந்தினி விளக்கி இருப்பதோடு வேண்டாத கேள்வியைக் கேட்கக் கூடிய நபர்களையும் விளாசித் தள்ளி இருக்கிறார் எனக் கூறியிருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam