சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவுக்கு பதில் கங்கனா ரணாவத் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் வடிவேலு, ஜோதிகா நடித்து வெளியான சந்திரமுகி ஒன்று 4பற்றி இன்று நினைத்தாலும் மனதில் கிலியை ஏற்படுத்தக் கூடிய வகையில் பிரம்மாண்டமான படமாக வெளிவந்து வசூலிலும் சாதனை புரிந்தது.

 இந்த படத்தில் வேட்டையானாக வரும் ரஜினிகாந்த் மற்றும் சந்திரமுகி ஆக நடித்த ஜோதிகாவின் நடிப்பு காலத்திற்கும் அழியாத பொக்கிஷம் என்று கூறலாம். இது போல ஜோதிகாவுடன் இணைந்து நடனமாடிய வினித் பற்றியும் கூறிய ஆக வேண்டும் மிக செமையான டான்ஸ் பெர்பார்மன்ஸ் ஜோதிகாவுடன் இணைந்து செய்து கலக்கி இருப்பார்.

 இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாவது பகுதி தற்போது படம் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் லாரன்ஸ்  நடித்து வருகிறார்.

ஜோதிகா கதாபாத்திரத்தை நடிகை கங்கணா ராணவத் நடிக்க உள்ளதாக உள்ள தகவலை லைக்கா நிறுவனம் தற்போது உறுதி செய்து விட்டது. இந்த இரண்டாவது பாகத்தை எடுக்கும்போது ரஜினிகாந்தையே வைத்து எடுக்கலாம் என்று திட்டமிடப்பட்ட நிலையில் அது பின் கைவிடப்பட்டது.

 எனவே பி வாசு சந்திரமுகி இரண்டு படத்தில் நடிகர் லாரன்ஸை கதாநாயகனாக வைத்து எடுக்க முடிவு செய்தார்.17 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் வெளிவர உள்ள நிலையில் லாரன்ஸ் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

 மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு மற்றும் ராதிகா நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிகை மகிமா நம்பியார், லட்சுமிமேனன் போன்ற நடிகைகளும் நடிக்க உள்ளதாக இருந்த நிலையில் தற்போது படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ள விஷயத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

 மேலும் இந்த பட வாய்ப்பை தானாகவே முன்வந்து பி வாசுவிடம் அவர் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் ஜோதிகாவை போல் கங்கனாகவும் ரசிகைகள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரிந்து விடும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …