என்னை காமெடி பீஸ் ஆக்கிய இயக்குனர்.. உச்ச கட்ட கடுப்பில் பகத் பாசில்..!

மலையாளத் திரைப்படத் துறையில் கலக்கி வரும் பகத் பாசித் 2002-ஆம் ஆண்டு இவரது தந்தை பாசில் இயக்கிய கையேந்தும் தூரத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு 2011 ஆம் ஆண்டு கேரள மாநில அரசின் இரண்டாவது சிறந்த நடிகர் விருதினை பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க: எந்த ஆணுறை சிறந்தது.. கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ரகுல் பிரீத் சிங்..!

மிகப் பிரபலமான இயக்குனர் பாசில் அவர்களின் மகனாகிய பகத் பாஸில் 1982-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை ஊட்டியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பயின்றார். அதன் பிறகு ஆழப்புழாவில் உள்ள சனாதன தர்ம கல்லூரியில் கல்லூரி படிப்பை படித்த இவர் முதுகலை பட்டப்படிப்பை அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

நடிகர் பகத் பாசில்..

இதை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் நடிப்பு அசுரனாக விளங்கும் பகத் பாஸில் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படத்தில் சாதிய வன்மம் நிறைந்த வில்லக் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பகத்தின் நடிப்பு பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு அந்த கதாபாத்திரத்தையே தூக்கி சாப்பிடக்கூடிய அளவு மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார் எனக் கூறலாம்.

ஆரம்ப நாட்களில் இயக்குனர் மகனுக்கு நடிப்பு வரவில்லை என்று பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்த நிலையில் கேரளா கஃபே என்ற குறும்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த பகத்பாஸில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறார்.

இவர் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இந்திய அளவில் என்று முன்னணி நடிகராக தற்போது உயர்ந்திருக்கிறார்.

காமெடி பீசாக்கிய இயக்குனர்..

இதனை அடுத்து தற்போது அனைவராலும் கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் பகத் பாசில் நடித்து வருகிறார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசும் போது கூறிய விஷயம் தற்போது பலரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

அதாவது இவர் விக்ரம் படத்தில் நடிக்கும் போது ஒரு டெரரான கேரக்டரில் நடித்ததை அடுத்து கமலஹாசன் கேரக்டரை விட அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்கள் தன்னை கொண்டாடினார்கள் என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

ஆனால் வேட்டையின் படத்தை பொறுத்த வரை அந்தப் படத்தின் இயக்குனர் ஞானவேல் தன்னை ஒரு காமெடி பீஸ் ஆக பயன்படுத்தி உள்ளார் என்பதை விவகாரமாக தெரிவித்தார்.

உச்சகட்ட கடுப்பில் பகத்..

அத்தோடு தான் முதலில் ரஜினிகாந்த் படத்தில் காமெடி கேரக்டரா? என்று யோசித்தேன். அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரம் குறித்து விரிவாக என்னிடம் கூறிய போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் அதனை அடுத்து தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்படி வேட்டையன் படத்தில் ரஜினியின் கேரக்டர் என்னவாக இருக்கும். இப்படி ட்விஸ்ட் வைத்து பகத் பேசியிருப்பது எதற்காக என்பது போன்ற கேள்விகளை முன் வைத்து இருப்பது மட்டுமல்லாமல் அவர்கள் மண்டையை குடைய கூடிய அளவிற்கு யோசித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. அடுத்து இந்த விஷயத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version