இதனால் தான் சிம்பு மீது எந்த நடிகையும் புகார் கொடுக்கல.. பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்கள்..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதனை அடுத்து ஹீரோவாக வலம் வந்த நடிகர்களின் மத்தியில் சிலம்பரசன் என்கின்ற சிம்புவும் ஒருவர். இவரது அப்பா டி ஆர் ராஜேந்திரன் சிறுவயதிலிருந்தே சிலம்பரசனை சினிமாவிற்காக பட்டை தீட்டி வளர்த்தவர்.

நடிகர் சிம்புவும் குழந்தை நட்சத்திரமாக கலை கட்டியதோடு வளர்ந்து ஹீரோவாக மாறிய பிறகும் தனது அற்புத நடிப்பால் பலரையும் கவர்ந்து தனக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருப்பவர்.

நடிகர் சிம்பு..

நடிகர் சிம்புவை பொறுத்தவரை தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாக ஒவ்வொரு வீட்டிலும் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்த இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இதுவரை 47 படங்களில் நடித்திருக்க கூடிய அவர் அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசனோடு இணைந்து தக் லைப் என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருப்பதோடு எஸ் டி ஆர் 48 படத்திலும் நடித்து வருகிறார்.

சிம்புவின் அப்படியும் எப்படியுமான போக்கால் திரை உலகை அவரால் வெற்றி பெற முடியாது இனி எழுந்திருக்கவே முடியாது என்று நினைத்தவர்களின் மத்தியில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்ஸ் சிக்சரை அடித்து திரும்பி வந்துட்டேன் என்று சொல்ல வைத்து விட்டார்.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் அனைவரும் உற்சாகமான மனநிலையில் இருந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா, சிம்பு குறித்து பேசிய பேச்சுக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் சிம்பு மீது எந்த நடிகையும் புகார் கொடுக்கல..

உலக நாயகன் கமலஹாசனுக்கு அடுத்தபடியாக திரை உலகில் அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருக்க கூடிய பன்முகத்திறமையாளரான எஸ் டி ஆர் பல ஜனரஞ்சகமான விஷயங்களை மிக எளிதாக செய்யக் கூடியவர்.

அந்த வகையில் சிம்பு இயக்கத்தில் வெளிவந்த மன்மதன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு வல்லவன் படமும் வெற்றியை தந்தது. இதனை அடுத்து அனைவரும் இவரை சிங்கில் டேக் ஆர்டிஸ்ட் என்று பல இயக்குனர்கள் சொல்வதுண்டு.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சில ஆண்டுகளாக தடுமாற்றத்தில் சிம்பு இருந்த போதும் ஆன்மீகத்தின் பக்கம் தனது கவனத்தைச் செலுத்தி சினிமாவில் கவனக்குறைவாக இருந்தார் என்று பல சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.

அது மட்டுமல்லாமல் இவர் வரிசையாக தோல்வி படங்களை கொடுத்ததை அடுத்து சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுக்க எண்ணி மாநாடு படத்தில் மூலம் மீண்டு வந்த சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ் டி ஆர் 48 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இது மட்டுமல்லாமல் சுதா கோங்குரா இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

பிரபலம் வெளியிட்ட பகிர் தகவல்கள்..

இந்நிலையில் தற்போது சேகுவரா தனியார் youtube சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டையில் சிம்பு மிகச்சிறந்த திறமையான நடிகர் அவருடன் நடிக்கத்தான் நடிகைகள் ஆசைப்படுவார்கள். ஏனென்றால் சிறு வயதிலிருந்து நடித்து வரக்கூடிய அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது.

மேலும் சிம்பு மீது பல குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். ஆனால் ஒன்று சிம்புவை நடிகைகள் தான் ஏமாற்றி இருக்கிறார்களே ஒழிய சிம்பு யாரையும் ஏமாற்றவில்லை. மேலும் இது வரை எந்த ஒரு நடிகை கூட சிம்பு என்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்ததில்லை.

அதுமட்டுமல்லாமல் நிறைய காதல் தோல்விகளை சந்தித்தும் இப்போது தனித்து நின்று போராடக்கூடிய குணம் சிம்புவிடம் உள்ளது. டிஆரால் வளர்க்கப்பட்டு வாழ்ந்தவர்கள் தான் அதிகம் ஆனால் அழிந்தவர்கள் யாரும் இல்லை.

அது போலத்தான் காதல் என்பது சிம்புவுக்கு ஏற்படக்கூடிய ஒரு இயல்பான ஒன்று தான். அந்த வகையில் சிம்பு யார் குடியவது கெடுத்து விட்டாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எனவே தான் எந்த ஒரு நடிகையும் சிம்பு வை பற்றி புகார் கொடுக்கவில்லை ஒரு நடிகராக சிம்புவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version