இயக்குநர் சேரன் தமிழில் மிகவும் முக்கியமான ஒரு படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தி வருபவர். பல நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கிறார்.
சேரன்
இயக்குநராக மட்டுமின்றி ஒரு கட்டத்தில் நல்ல நடிகராகவும் தனது பங்களிப்பை தமிழ் படங்களில் சேரன் தந்திருக்கிறார்.
இப்போதும் படங்களை இயக்குவதிலும், படங்களில் நடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட கலைஞராக சேரன் இருந்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, இன்னோரு தேசிய கீதம், தவமாய் தவமிருந்து, திருமணம், மாயக்கண்ணாடி ஆகிய படங்களை தந்தவர்.
இதில் ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, தவமாய் தவமிருந்து ஆகிய 3 படங்கள் தேசிய விருது பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார் சேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற இயக்குநர்களின் இயக்கத்தில் ராமன் தேடிய சீதை, சொல்ல மறந்த கதை, முரண், பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களிலும் சேரன் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ல் சேரன் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்தவர் சேரன். அப்பா தியேட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்தவர். அப்பாவின் தொழில் பக்தி மகனை சினிமா இயக்குநராக, நடிகராக மாற்றிவிட்டது. அம்மா தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தவர்.
சினிமாவில் சாதிக்கும் ஆசையில் சென்னை வந்த சேரன், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக புரியாத புதிர் படத்தில் இருந்து பணிபுரிந்தார்.
சேரன் பாண்டியன், நாட்டாமை வரை பல படங்களில் சேரன், கேஎஸ் ரவிக்குமாருடன் இணைந்து பணி செய்தார். மகாநதி படத்திலும் உதவி இயக்குநராக பணிசெய்தவர் சேரன்.
வெப் சீரிஸ்
திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இப்போது சேரனின் ஜர்னிவெப் சீரிஸ் ஒன்றை இயக்கி இருக்கிறார் இயக்குநர் சேரன்.
இந்த வெப் சீரிஸ் தொடரில் நடிகர்கள் சரத்குமார், கலையரசன், ஆரி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த விழாவில் கலந்துக்கொண்ட பிரபலங்கள், எந்த கடைக்கு அடிக்கடி போவார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது சரத்குமார், ஆரி, கலையரசன் போன்றவர்கள் பிராண்டட் ஆன முன்னணி நிறுவனங்களின் கடைகளை சொன்னார்கள்.
பிளாட்பார கடைதான்…
ஆனால் இயக்குநர் சேரனிடம் கேட்ட போது, நான் பிளாட்பார கடையில்தான் பேண்ட் சர்ட் எடுப்பேன். எப்போதுமே அங்குதான் எடுப்பது வழக்கம். இப்போதும் கூட அங்குதான் எடுக்கிறேன்.
அதுமட்டுமல்ல, சாப்பிடறது கூட பிளாட்பார்ம்ல தான் சாப்பிடுவேன். இப்பவும் ஒரு கடையில் பூண்டுதோசை நல்லா இருக்கும் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் சேரன்.
எந்த கடைக்கு அடிக்கடி போவீங்க என்ற கேள்விக்கு பிளாட்பார கடைக்குதான் என்ற சேரன் கொடுத்த பதிலை கேட்டு பலரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.