நக்மாவுக்கு ECRல வீடு.. கடனை அடைக்க ராதிகாவுடன் திருமணம்.. உடைத்து பேசிய பிரபலம்..!

தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் ஆக உலா வரக்கூடிய நடிகர் சரத்குமார் மிகச்சிறந்த பாடி பில்டராக திகழ்கிறார். இவர் பெங்களூருவில் பணியாற்றிய பொழுது இராணுவ அதிகாரியின் மகளாகிய சாயாதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

1986-இல் சாயாதேவியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் பார்த்த வேலை பிடிக்காமல் போக திரை உலக பிரவேசத்தை செய்தவர் நடிகர் சரத்குமார்.

நடிகர் சரத்குமார்..

நடிகர் சரத்குமார் ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக்கை வைத்து திரைப்படம் எடுத்து போண்டியான நிலையில் மீண்டும் திரை உலகில் நடிகராக நடிக்க வேண்டும். எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் திரை உலகில் அடி எடுத்து வைக்கிறார்.

அந்த வகையில் சில திரைப்படங்களில் வில்லனாக களம் கண்டு சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து வந்த இவர் மிகச்சிறப்பான ஹீரோவாக மாறியதை அடுத்து நாட்டாமை படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அது மட்டுமல்லாமல் சேரன் பாண்டியன், சூரியன் போன்ற படங்கள் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.மேலும் தமிழ் திரை உலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க பல வெற்றி படங்களை கொடுத்தார்.

நடிகர் சரத்குமார் பெங்களூருவில் இருந்த தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனையை சரி செய்ய ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறி இருக்கிறார் பிரபல திரைப்பட விமர்சகர் செய்யாறு பாலு.

கடனை அடைக்க ராதிகாவுடன் திருமணம்..

90 சமயங்களில் கேப்டனுக்கு போட்டியாக டப் கொடுத்த சரத்குமார் விவாகரத்து செய்ததை அடுத்து விவாகரத்துக்கு காரணமாக ஒரு நடிகை இருப்பதாக பல விஷயங்கள் ஊடகங்களில் பரவியது.

மேலும் அந்த கிசுகிசுக்கள் உண்மையா? என்று சொல்லுவதற்கு முன்பே அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது போன்ற விஷயங்கள் பரவியதை அடுத்த தான் சாயாதேவி அவரை விட்டு விவாகரத்து பெற்று விலகி இருக்கிறார்.

இதனை அடுத்து நக்மாவும் திரைப்படங்களில் பாட்ஷா போன்ற வெற்றி படங்களில் நடித்து நல்ல பெயரை எடுத்து கடைசியாக மும்பை சென்று செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் அன்று திரைத்துறையில் கொடி கட்டி பறத்த சரத்குமாருக்கு முதல் மனைவி இருக்கிறார் என்ற விஷயம் ஊடகத்துறையில் இருக்கும் பலருக்கும் தெரியாது.

அப்போது தான் வரலட்சுமி சரத்குமார் திரை உலகில் நடிக்க வரவேண்டும் என்று நினைத்தார். இவர் சரத்குமாரின் மகள் என்பது மீடியாவிற்கு வந்த பின் வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிய வர ஆரம்பித்தது.

சிறந்த நடிகராக திகழ்ந்த நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை தற்போது பிஜேபியோடு இணைத்து கொண்டதை அடுத்து கிடைத்த பணத்தை வைத்து தான் பலதும் பண்ணி இருப்பதாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் சொல்லி வருகிறார்கள்.

உடைத்துப் பேசிய பிரபலம்..

மேலும் நக்மாவுக்கு ஈசிஆரில் வீடு வாங்கித் தந்ததோடு வாழ்க்கையும் நடத்திய இவர் கடனை அடைக்கத்தான் ராதிகாவுடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த அதிர்ச்சி தரக்கூடிய தகவலை உடைத்து பேசிய செய்யாறு பாலுவின் பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாக வந்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை ரசிகர்கள் தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் உண்மை வாழ்க்கை உடைந்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version