நான் ஜீன்ஸ் போட கூடாதா..? நடு ரோட்டில் ராஜலட்சுமிக்கு சீண்டல்.. அமெரிக்காவில் நடந்த அசிங்கம்..!

மக்கள் இசை பாடகராக நமக்கு தற்போது நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் தம்பதிகள் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

விஜய் டிவியில் நடந்த பாடகருக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துஸகொண்டு கிராமப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர்கள் இதன் மூலம் உலக அளவில் பேமஸ் ஆனார்கள்.

நான் ஜீன்ஸ் போட கூடாதா..?

இதனை அடுத்து இருவருக்குமே திரைப்படங்கள் பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து திரைப்பட பாடல்களையும் பாடி கலை கட்டி வரும் இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் செய்து படு பிஸியாக இருந்து வருகிறார்கள்.

தனது கணவர் செந்தில் கணேசைவிட ஒரு படி மேலே சென்று பாடகி ராஜலட்சுமி லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகையாக களம் இறங்கியதை அடுத்து வெகுவாக பேசப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் ராஜலட்சுமி அமெரிக்கா சென்றிருந்த போது ஏற்பட்ட சில விஷயங்கள் பற்றி செய்யாறு பாலு ஓபன் ஆக பேசியிருப்பது இணையங்களில் பரவலாக பரவி வருகிறது.

மேலும் அமெரிக்காவிற்கு சென்று விமான நிலையத்தில் இறங்கியவுடன் அங்கு இருந்த பலரும் தன்னை மேடம் என்று அழைக்காமல் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி அக்கா என்று அன்போடு அழைத்ததாக சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து தன்னை தங்களோடு இணைந்து பிறந்தவர்களாகவே நினைத்து உறவு முறை சொல்லி அழைத்த மக்களை பார்த்து மகிழ்ந்திருந்த ராஜலட்சுமிக்கு இடி விழுவது போல மற்றொரு நிகழ்வு நடந்ததாக செய்யாறு பாலு சொன்னார்.

நடு ரோட்டில் ராஜலட்சுமிக்கு சீண்டல்..

பனி நிறைந்த அமெரிக்க தேசத்தில் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு அங்கு போட்டோ சூட் மற்றும் வீடியோவை எடுத்து ராஜலட்சுமி தனது instagram பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து என்ன நடந்தது என்று தெரியுமா?

ஒரு கிராமப்புற பகுதியில் அதுவும் விளிம்பு நிலையில் இருக்கும் குடும்பச் சூழலில் இருந்து வெளி வந்து இருக்கக்கூடிய எவரது நிறத்தை பற்றியும் உருவத்தைப் பற்றியும் பல வகைகளில் கிண்டலும் கேலியுமாக பல்வேறு கமாண்டுகளை பதிவிட்டு இருந்தார்கள்.

அது மட்டுமல்லாமல் அப்படிப்பட்ட பகுதியில் இருந்து வந்த உனக்கு அமெரிக்காவில் என்ன ஆடுகிறது என்பது போன்ற விஷயங்களை கேட்டிருந்தார்கள்.

 

மேலும் டைட்டான ஜீன்ஸில் அமெரிக்காவில் சுற்றிய நீ இதே ஆடையை போட்டு உங்கள் ஊரில் சுற்ற முடியுமா என்பது போன்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

இப்படி முகம் தெரியாத பல நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியதற்கு சற்றும் மனம் கோணாமல் அவர் பதிலும் அனுப்பியது தான் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்று செய்யாறு பாலு பேட்டியில் பேசும் போது சொன்னார்.

அமெரிக்காவில் நடந்த அசிங்கம்..

இது போல பல சைக்கோக்கள் அவர்களுக்கு தோன்றியதை பல்வேறு வகைகளில் வார்த்தைகளாக அள்ளித் தெளிப்பார்கள். இதை அடுத்து வேதனையோடு ராஜலட்சுமி தெரிவித்த விஷயம் என்ன வென்றால் இது போன்ற உடைகளை நான் அணியக்கூடாதா? என்றது என்ற கேள்வி தான்.

மேலும் அங்கு உறவு முறை சொல்லி அழைத்த தமிழர்களைப் பற்றி நான் பெருமிதம் கொள்கின்ற அதே வேளையில் அங்கு இருந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற படி உடை அணிந்தது தவறான விஷயம் என்று நெட்டிசன்கள் கெட்ட வார்த்தையில் திட்டியது பற்றி ஆவேசமாக பதில் அளித்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உடல் அணிவது உங்கள் கண்களை எப்படி உறுத்துகிறது என்று ஆவேசமாக பேசிய பேச்சில் நியாயம் இருப்பதாக செய்யாறு பாலு சொல்லி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version