யோவ்.. என்னய்யா மனுஷன் நீயி.. 70 வயசுல இப்படி TUFF குடுக்குற.. தீரா பசியோடு அலையும் ரஜினி..!

அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ஒரு பரபரப்பு ஒரு எதிர்பார்ப்பு என்று மக்கள் இடையே இன்றும் இருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்.

70 வயது கடந்த நிலையில் அதே சுறுசுறுப்பு அதே ஸ்டைல் அதே வேகம் என அடுக்கிக் கொண்டே போகக் கூடிய வகையில் அண்மையில் அம்பானி வீட்டு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட விஷயம் வைரலானது கூட நினைவில் இருக்கும்.

யோவ் என்னய்யா மனுசன் நீயி..

பெரும்பாலும் ரஜினி நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை தந்த நிலையில் காலா, பேட்டை படத்தில் அந்த அளவிற்கு வசூலில் சோபிக்காத ரஜினி ஜெய்லர் படத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் வேட்டையன் படத்தில் கலை கட்ட இருப்பதாக பலரும் சொல்லி வருகிறார்கள்.

இதனை அடுத்து வேட்டையின் கதை எப்படி இருக்கும் சமூக விஷயங்களை அலசிகின்ற படமாக இருக்குமா? அல்லது ஒரு என்கவுண்டர் படமாக இருக்குமா? என்ற வகையில் தற்போது விமர்சனங்கள் இப்போது வெளி வந்திருந்தாலும் நிச்சயமாக அது ஒரு அதிகாரியின் கதையாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

தற்போது நடிக்கக்கூடிய நடிகர்கள் தங்களது படம் ஓரளவு ஓடினாலே சம்பளத்தைக் கூட்டி அவ்வளவு வேண்டும் எவ்வளவு வேண்டும் என்று கேட்கக்கூடிய நிலையில் இருக்கும் இளம் நடிகர்கள் அனைவரும் பார்த்து வியக்கக்கூடிய நடிகர்களாக ரஜினி மற்றும் கமல் விளங்குகிறார்கள்.

இதற்கு காரணம் வேட்டையின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் கூலி படப்பிடிப்பில் இருக்கக்கூடிய ரஜினி அடுத்தடுத்து படங்களுக்கான கதைகளை கேட்டு வருகிறார்.

70 வயசுல இப்படி TUFF குடுக்குற..

ரஜினிகாந்த் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கிளம்பி வருகிறார் விமானம் கிளம்ப தயாராக இருக்கிறது. சமயத்தில் ஒரு பாட்டி மிக நிலையில் ரஜினி அருகே வரும்போது ரஜினி அவர் தன்னுடைய ரசிகை என்று நினைக்கிறார்.

இதனை அடுத்து அந்த பாட்டி உன்னை ராகவேந்திரா படத்தில் பார்த்திருக்கிறேன் அது மட்டுமல்லாமல் மற்றொரு படத்தில் நீ கெட்ட வார்த்தைகள் அதிகளவு சொல்லி நடித்திருக்கிறாய் இது நல்லதல்ல என்று சொல்லியிருக்கிறார்.

இதனை அடுத்து அந்த பாட்டியோடு இருந்த பேரன் ரஜினி இடம் மன்னிப்பு கேட்க சரி சரி என்று ரஜினியும் எதார்த்தமாக விட்டு விடுகிறார். இதைத் தொடர்ந்து பாட்டி ஒரு இடத்தில் அமர்ந்த பிறகு ரஜினி கண்களை மூடி யோசித்துப் பார்க்கும் வேளையில் பிளைட்டில் இருந்த அனைவரும் ரஜினியை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் வந்தது பாட்டி அல்ல ஸ்ரீ ராகவேந்திரர் தான் பாட்டி ரூபத்தில் வந்து தனக்கு இந்த அறிவுரைகளை தந்ததாக நினைக்கிறார். அந்த வேளையில் தான் அவரது மாவீரன் திரைப்படம் வெளி வந்தது.

இதனை அடுத்து இந்த திரைப்படம் ஆனது சூப்பர் ஹிட் ஆக மாறியதோடு வாங்கடா வாங்க என் வண்டிக்கு பின்னால என்ற பாடலும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

தீரா பசியோடு அலையும் ரஜினி..

இதனை அடுத்து நடித்த படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து அந்த பாட்டி மாவீரன் படத்தை பார்த்து வந்து தான் ரஜினியிடம் அந்த மேட்டரை பேசியிருக்கிறார் என்பதை ரஜினி புரிந்து கொண்டார்.

இதை தொடர்ந்து சென்னையில் தரை இறங்க தயாராகிவிட்ட நிலையில் அமர்ந்திருந்த ரஜினி நேராக பாட்டியிடம் சென்று அவர் காலில் விழுந்து இனி மேல் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை பேசமாட்டேன் என்று பாட்டியிடம் கூறுகிறார்.

மேலும் இது குறித்து பாலச்சந்தரிடம் பேசும்போது கூறியவர் இரட்டை அர்த்த வசனங்களோ பெண்களை இழிவு படுத்தாத படி இருக்கும் படம் ஒன்றில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூட உடனே முத்துரானை அழைத்து கதை ஏற்பாடு பண்ண சொல்லி அடுத்து உருவான கதை தான் வேலைக்காரன்.

இந்த படத்தில் ரஜினி மிகச்சிறப்பாக தனது நகைச்சுவை திறனையும் வெளிப்படுத்துவார். இப்படி படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறிய ரஜினிகாந்த் 70 வயதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல படங்களில் பிஸியாக நடிக்க வருகிறார் என்று செய்யாறு பாலு பேசி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version