ஒரே மணி நேரத்திற்குள் ரஞ்சிதமே சாதனையை முறியடித்த… தல அஜித்தின் துணிவு சில்லா சில்லா…!!

 தல அஜித்தின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த பாடல் தற்போது வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்த பாடல் ஆனது துணிவு படத்திலிருந்து  கூலாக வெளிவந்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகரித்துவிட்டது.

 இப்போது ரசிகர்கள் மத்தியில் சில்லா சில்லா என்ற பாடல் வரிகள் தொடர்ந்து ஒலித்து வருவதால்  ரசிகர்கள் படுகூலாக இந்த பாடலை கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

ஜிப்ரன் இசையில் அனிருத் பாடியிருக்கும் இந்தப் பாடலை தற்போது அவர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக இந்த பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் சாதனையை முறியடித்துள்ளது.

மேலும் ரஞ்சிதமே பாடல் 500 கே லைக் செய் பெற கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆன நிலையில் தற்போது துணிவு படத்தின் சில்லா, சில்லா 47 நிமிடங்களிலேயே 500 கே லைக்சை பெற்று சாதனை படைத்து விட்டது.

இதனை அடுத்து மிகுந்த மகிழ்ச்சிகள் தல ரசிகர்கள் இப்போது தலையை கொண்டாடி வருகிறார்கள். இது போலவே படமும் வெளிவந்தால் நிச்சயம் தியேட்டர்களில் விசில் சவுண்டுக்கு பஞ்சம் இருக்காது.

 வசூலையும் வாரி குவிக்கும் என்ற எண்ணத்தில் கெத்தாக அவர்கள் இருக்கிறார்கள். என்றுமே தல…தல தான் என்ற வசனம் இப்போ … இப்போது எங்கும் கேட்கிறது என்று கூறலாம்.

 அதற்கு ஏற்ப தான் சில்லா… சில்லா பாடலும் தமிழகத்தில் பட்டி தொட்டிகளை கூட விட்டு வைக்காமல் பட்டையை கிளப்பி விட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் துணிவு படத்தை பார்க்கக்கூடிய ஆவலில் தற்போது காத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த பாடல் படு வித்தியாசமாக இருப்பதால் ரசிகைகள் அதை  கேட்கிறார்கள். இளசுகள்  மட்டுமல்லாமல் பெருசுகளும், சிறுசுகளும் இந்த பாடலை விரும்பி கேட்ட வண்ணம் இருக்கிறார்கள் என்பது எந்த பாடலுக்கு பிளஸ் ஆக உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …