வாடகை வீட்டில் இருந்தவர்கள் தான் என் கற்பை.. குண்டை தூக்கி போட்ட பாடகி சின்மயி..!

வாடகை வீட்டில் வசிப்பது என்பது, மிக கொடுமையானது. அப்படிப்பட்ட கசப்பான அனுபவங்கள் பலருக்கும் இருக்கும். ஏனெனில் சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு குடியிருப்பது என்பது அதுவும் வீட்டு உரிமையாளர்கள் அருகில் இருக்கும் பட்சத்தில் அங்கு வாழ்வது என்பது ஒரு நரகத் கொடுமையாக தான் இருக்கும்.

வாடகை வீடு

ஏனெனில் அந்த அளவுக்கு அவர்கள் போடும் கண்டிஷன்களும், அடிக்கடி அவர்கள் செய்யும் டார்ச்சரும் வாழ்க்கையே வெறுத்து விடும் அளவிற்கு அவர்களது கடும் நடவடிக்கை இருக்கும்.

மாதந்தோறும் வாடகையும் கொடுத்துவிட்டு, அவர்களிடம் அந்த துன்பத்தையும் அனுபவிக்கும் கசப்பான அனுபவம் பலருக்கும் இருந்திருக்கிறது. அதுவும் சினிமா துறை சார்ந்தவர்கள் சொந்த வீடு இல்லாத சூழலில் இப்படி வாடகை வீடுகளில் வசிக்கும் போது, மிக மோசமான அனுபவங்களை சந்தித்து இருக்கிறார்கள். அது போல் தான் பாடகி சின்மயிக்கும் நேர்ந்திருக்கிறது.

பாடகி சின்மயி

சென்னையில் வாடகை வீடுகளில் வசித்தபோது, தனக்கு ஏற்பட்ட மிக மோசமான அனுபவங்கள் குறித்து, பாடகி சின்மயி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தெய்வம் தந்த பூவே…

தமிழ் சினிமாவில் மிக முக்கிய முன்னணி பாடகிகள் ஒருவராக இருப்பவர் சின்மயி. இவர் மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் பாடலிலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

வைரமுத்து மீது பாலியல் புகார்

தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடிவரும் பாடகி சின்மயி சமூக பிரச்னைகளுக்காகவும், மீ டூ என்ற பாலியல் குற்றச்சாட்டு குறித்த சமூக விழிப்புணர்வுக்காகவும் தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்து வருகிறார். கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாடகி சின்மயி, சமீபத்தில் நேர்காணலில் கலந்து கொண்ட போது அவர் கூறியதாவது,

சென்னையில் 32 ஆண்டுகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இதுவரை 42 வீடுகள் நாங்கள் மாறி இருப்போம். வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். ஆனால் இந்த வாடகை வீட்டில் வசித்த வகையில், அவ்வளவு மோசமான அனுபவங்களை நான் சந்தித்து இருக்கிறேன்.

மோசமான மனிதர்களை…

வாடகை வீட்டில் இருந்தபோது பல மோசமான மனிதர்களை நான் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் ஏண்டா நாம் வாழ்கிறோம் என்று நினைக்கும் அளவுக்கு என்னை டார்ச்சர் செய்தார்கள். தேவையில்லாமல் அனைத்து விஷங்களிலும் மூக்கை நுழைத்து எனக்கு அறிவுரை கூறினார்கள்.

என் கற்பை காப்பாற்றுவது போல…

என்னமோ இவர்கள்தான் என் கற்பை காப்பாற்றுவது போல நடந்து கொண்டார்கள். என் கற்பை பாதுகாக்க எனக்கு தெரியும் என்று சொல்லக்கூடிய தைரியம் அப்போது எனக்கு இல்லை.

19 வயதில்…

மீ டூ விவகாரம் குறித்து அப்போது சொல்லாமல், இப்போது சின்மயி ஏன் பேசுகிறார் என்றும் என்னை விமர்சனம் செய்தார்கள். அப்போது எனக்கு வயது 19 வயசு. அந்த வயதில் அந்த தைரியம் என்பது எனக்கு இல்லை. 19 வயதில் அதை ஏன் சொல்லவில்லை என்று கேட்டவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று கோபமாக அதில் சின்மயி பேசியுள்ளார்.

இந்த நேர்காணலில், வாடகை வீட்டில் இருந்தவர்கள்தான் என் கற்பை காப்பாற்ற போகிறார்களா என கோபமாக கேட்டிருக்கிறார் பாடகி சின்மயி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version