திரிஷாவின் உதட்டுக்கு ஏற்ப நான் செய்தது பெரிய சவால்.. ஓப்பனாக பேசிய பிரபலம்..

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகை திரிஷா சாமி, கில்லி போன்ற தமிழ் படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு சென்னை அழகியாக 1999 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து இதே ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த இவரது நடிப்பிற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

நடிகை திரிஷா..

இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் சந்தியா கேரக்டரை சிறப்பாக செய்து சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்ற இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார்.

அந்த வகையில் 2023 இல் வெளி வந்த லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு ஒரு மிகப்பெரிய இடத்தை பெற்று தந்தது.

இதனை அடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த இவர் மணிரத்தினத்தின் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு மீண்டும் தான் முன்பே நடித்த முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தளபதி விதையோடு லியோ படத்தில் நடித்து முடித்த இவர் தற்போது அஜீத், தலைவர் என பல படங்களில் நடிக்க தமிழ் கமிட்டாகி இருக்கிறார்.

திரிஷா உதடு அசைவுக்கு ஏற்ப பண்ணுனேன்..

இந்நிலையில் இவர் பிரேம்குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு நடித்த 96 படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். காதலை மையமாகக் கொண்ட இந்த திரைப்படமானது காதலர் தினம் என்று ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்று தந்தது.

இந்நிலையில் தற்போது பிரபல பாடகி சின்மயி 96 படத்தின் பாடல் ஒளிப்பதிவு சமயத்தில் நடந்த விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த படத்தில் தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை படமாக்கும் போது திரையில் ஓட விட்டு திரிஷாவின் உதடு அசைவுக்கு ஏற்ப பாட வேண்டும் என்று கூறினார்கள்.

ரொம்ப சவாலா..

அப்படி திரிஷாவின் உதடு அசைவுக்கு ஏற்ப பாடுவது ரொம்பவே சவாலாக இருந்ததாகவும், மிகவும் சிரமப்பட்டு தான் அந்த பாடலை பாடினேன் என்ற விஷயத்தை தற்போது தெரிவித்திருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி உள்ளதோடு சின்மயியே இந்தப் பாடலைப் பாட அவ்வளவு திணறினாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும் நடிகையின் உதட்டு அசைவுக்கு ஏற்ப பாடலை பாடுவது என்பது சற்று கடினமான காரியம் தான் எனினும் மிகச் சிறப்பான முறையில் அந்த வேலையை சின்மயி சூப்பராக செய்திருக்கிறார். அந்த பாடலை கேட்கும் போது உதடு அசைவுக்கு ஏற்ற படி தான் இவர் பாடியிருக்கிறார் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.

ஏனென்றால் பாடலை நடிகை திரிஷாவின் பாடுவது போலத்தான் உதடு அசைவில் இருக்கிறது என்று ரசிகர்கள் அனைவரும் தற்போது கூறி வருவதோடு, சின்மயிக்கு பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்தப் பாடலை கேட்கும் போது இனி உற்றுப் பார்த்தால் உங்களுக்கு உண்மை என்ன என்பது எளிதில் விளங்கிவிடும். அப்படி விளங்கினால் நீங்கள் நிச்சயமாக சின்மயி செயலையை பாராட்டுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version