” எளிதில் ஜீரணத்தை தூண்டும் வெங்காய புளி..!” – எப்படி செய்யலாம் என பார்க்கலாமா?

தினமும் டிபன். சாதம், சாம்பார், ரசம் என்று வைத்து சாப்பிட்டு உங்களுக்கு போர் அடித்து போயிருக்கும். அப்படி போர் அடித்தவர்களின் வீட்டில் அடிக்கடி செய்வது வத்த குழம்பு அந்த குழம்பையும் சாப்பிட்டு உங்களுக்கு  சலிப்பு ஆகி இருக்கும்.

 அப்படி சலித்து போனவர்கள் உங்கள் வீட்டில் சின்ன வெங்காய புளி செய்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும்  உங்களை சாப்பிட தூண்ட கூடிய அளவுக்கு அது உங்களை சுண்டி இழுக்கும். அப்படிப்பட்ட சின்ன வெங்காய புலி எப்படி செய்யலாம் என்பதை இக்கட்டுறையில் காணலாம்.

 சின்ன வெங்காய புளி செய்ய தேவையான பொருட்கள்

1.இருபதில் இருந்து 30 வரை சின்ன வெங்காயம்

2.ஒரு மலை நெல்லி அளவு புளி

 3.15லிருந்து 20 பல் பூண்டு

4.ஓரு துண்டு இஞ்சி பொடி பொடியாக நறுக்கியத

தாளிக்க

  1. கடுகு
  2. உளுத்தம் பருப்பு
  3. வெந்தயம்
  4. பச்சை மிளகாய் இரண்டாக அறுத்தது
  5. நான்கு வர மிளகாய்
  6. வர மிளகாய் பொடி
  7. உப்பு தேவையான அளவு
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. நல்லெண்ணெய் தேவையான அளவு

 செய்முறை

முதலில் சின்ன வெங்காயத்தை உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் வானொலியில் நல்லெண்ணையை விட்டு சூடாக்கவும்.

 இதில் தாளிக்க தேவையான கடுகு, உளுந்து பருப்பு, வெந்தயம் போன்றவற்றை போட்டு வெடிக்க விடவும். இது வெடித்தவுடன் இதனுடன் வர மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து லேசாக வதக்கவும்.

 பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கி விடவும். இதனை அடுத்து பூண்டையும் சேர்த்துக் கொண்டு வதக்க வேண்டும். பூண்டை சேர்த்த உடன் நீங்கள் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு வதக்கலாம்.

 இவை அனைத்தும் நன்கு வதங்கிய நிலையில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் புளியை நன்கு கரைத்து அந்த புளி கரைசலை இதில் விட வேண்டும். புளி கரைசலை இதில் விட்ட பிறகு வெங்காயம், பூண்டு போன்றவை வேகும் வரை கொதிக்க விடவும்.

இது கொதித்து வரும் நிலையில் உப்பினை கொஞ்சம் சேர்த்து விட்டு சிறிதளவு மிளகாய் தூளையும் போட்டு நன்கு கிளறி விடவும். இதனை அடுத்து மீண்டும் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கருவேப்பிலையை போடவும்.

 இப்போது உங்கள் ஜீரணத்தை எளிதாக்கும் வெங்காய புளி ரெடி. இதை நீங்கள் இட்லி, தோசைக்கு சைடிஷ் ஆக தொட்டுக் கொள்ளலாம் அல்லது தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் மிகவும் பிரமாதமாக இருக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …