நீயெல்லாம் ஒரு ஹீரோயினா..? ராதிகா சந்தித்த விமர்சனம்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ராதிகா.

திரைத்துறையில் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ,அரசியல்வாதி இப்படி பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

நட்சத்திர நடிகையாக ராதிகா:

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோக்களான ரஜினிகாந்த், கமலஹாசன்,விஜயகாந்த் ,மோகன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக பார்க்கப்பட்டது.

திரைப்படங்களில் நடித்த போது நடிகை ராதிகா கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கவே கூடாது அது போன்ற ஆடைகளை அணியவே கூடாது என்பதில் அவர் தாயார் அதிக கவனத்தை செலுத்தினார்.

மேலும் இயக்குனர்களுக்கு அதை ஒரு நிபந்தனையாகவே வைத்து வந்தார். அன்று முதல் இன்று வரை நடிகை ராதிக கவர்ச்சி விதமான கதாபாத்திரங்களை தவிர்த்தே நடித்து வந்தார்.

ராதாரவி, நிரோஷா, ராதா மோகன் எப்படி மிகப்பெரிய நட்சத்திர பிரபலம் கொண்ட குடும்ப பின்னணியில் இருந்து பிறந்து வளர்ந்த ராதிகா கடந்த 2001 ஆம் ஆண்டு சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முதல் படத்தில் அவமானம்:

திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனிடையே சீரியல்களிலும் நடித்து வந்த நடிகை ராதிகா சித்தி, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி, உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தில் நடித்த போது நடந்த சம்பவம் ஒன்றை பிரபல பத்திரிக்கையாளரும்,தயாரிப்பாளரும் , நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதாவது நடிகை ராதிகா அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தின் போது நான் பிஆர்ஓவாக வேலை பார்த்தேன்.

அந்த சமயத்தில் நடிகை ராதிகாவை ஹீரோயினாக பாரதிராஜா செலக்ட் செய்து விட்டார். அதை எடுத்து நான் அவரிடம் சென்று ராதிகாவின் புகைப்படத்தை பத்திரிகையில் போட்டு விடவா? ஹீரோயின் இவர்தான் என்று அறிவித்து விடலாமா? என்று கேட்டேன்.

உடனே பாரதிராஜா இல்லை… இல்லை.. வேண்டாம். இப்போது ராதிகாவின் பெயரை மட்டும் போடுங்கள். புகைப்படம் வெளியிடாதீர்கள் என கூறி மறுத்துவிட்டார் .

நீயெல்லாம் ஹீரோயினா?

நானும் அப்படியே செய்தேன். அதற்கு மிக முக்கிய காரணம் என்ன என்று கேட்டீர்களானால் அப்போது நடிகை ராதிகா மிகவும் கருப்பாக குண்டான தோற்றத்தில் இருப்பார் .

இதனால் ரசிகர்கள் பார்த்து இவரெல்லாம் ஒரு ஹீரோயினா? என்று பலர் சொல்லிவிடுவார்களோ என்றொரு அச்சத்தில் பாரதிராஜா அவரின் புகைப்படத்தை போட வேண்டாம் என கேட்டுக்கொண்டார் .

பின்னர் படத்தின் சூட்டிங் நடந்தபோது அங்கு பலரும் பாரதிராஜாவுக்கு ஏன் இப்படி ஒரு வேண்டாத வேலை? இப்படி ஒரு நடிகையை தேர்வு செய்திருக்கிறாரே? என கிண்டல் அடித்தார்கள்.

பின்னர் இந்த அவமானங்களை எல்லாம் பார்த்து தாங்கிக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து நடித்து இன்று ராதிகா மிக முக்கிய நடிகையாகவும் திறமையான நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

குறிப்பாக ஜீன்ஸ், சூரிய வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களில் ராதிகா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படத்திலும் ஜய் சேதுபதி அம்மாவாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடதக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version