நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு அதிக சிரத்தை, உடல் ரீதியான சிரமங்களை ஏற்று நடிக்கும் நடிகர் என்ற பெயர் சியான் விக்ரமுக்கு உண்டு.
காசி, அந்நியன், ஐ, சேது போன்ற பல படங்களில் அதை தத்ரூபமாக அவரது நடிப்பில் காண முடியும்.
சியான் விக்ரம்
காசி படத்தில், கண் பார்வையற்ற நடித்த வகையில், ஒரு கட்டத்தில் அவருக்கு பார்வையே பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு அந்த படத்துக்காக ரிஸ்க் எடுத்தவர் சியான் விக்ரம்.
சியான் விக்ரம் நடிப்பில் சிறந்த படைப்புகளாக அவர் தந்த போதும், சில நேரங்களில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்ய அவர் தவறி விடுகிறார். அதனால் அவரது உழைப்பு விரயமாகிறது.
சமீப வருடங்களாக சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறுகின்றன.
நடிகர் விக்ரம் தன்னுடைய கெட் அப் பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படத்தின் கதைக்கோ, திரைக்கதைக்கோ கொடுப்பதாக தெரியவில்லை என ரசிகர்கள் பலரும் நொந்து கொண்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்கும் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த படம் ரிசல்ட் எப்படி வரப்போகிறது என்பதை சொல்ல முடியாது.
பிளாக்பஸ்டர் ஹிட்
ஆனால் சீயான் 62 படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எஸ் கே சூர்யா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சமீப காலமாக எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்த அனைத்து படங்களும் வெற்றி அடைந்திருக்கின்றன.
வில்லனாக எஸ்ஜே சூர்யா…
மெர்சல் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்த நடிகர் எஸ் ஜே சூர்யா சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி வரை, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசர வைத்திருக்கிறார்.
இவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அனைத்து படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.
இந்நிலையில், கண்டிப்பாக சியான் 62 நடிகர் விக்ரமிற்கு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையும் என விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.
தங்கலான் ரிசல்ட் எப்படி வருமுன்னு எங்களுக்குத் தெரியாது.. ஆனா, சியான் 62 கன்ஃபார்ம் BLOCK BUSTER..தான். அதுக்கு காரணம், அதுல நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா இருக்கிறார் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.