“சுவையில் அசத்தும் பாரம்பரிய சோள குழிப்பணிகாரம்..!” – இப்படி செய்தால் ஒன்று கூட மிஞ்சாது..!

பொதுவாக கிராமங்களில் ஈசியாக செய்யக்கூடிய ரெசிபிக்களில் ஒன்றுதான் இந்தக் குழிப்பணியாரம். அதிலும் சோள குழிப்பணிகாரம் படுசூப்பரான மினி டிபன் என கூறலாம். இப்போது சோளத்தை கொண்டு சோள குழிப்பணியாரம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சோள குழிப்பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்

1.பச்சரிசி கால் கப்

2.சோள மாவு கால் கப்

3.இட்லி அரிசி அரை கப்

4.உளுத்தம் பருப்பு கால் கப்

5.வெந்தயம் சிறிதளவு

6.போதுமான அளவு உப்பு

7.பணியாரத்தை சுட்டு எடுக்க தேவையான எண்ணெய்

8.சின்ன வெங்காயம் பொடி பொடியாய் நறுக்கியது.

9.சிறிது கறிவேப்பிலை

10.நறுக்கி பச்சை மிளகாய் 4

11.கடுகு

12.உளுந்து

13.சீரகம்

 செய்முறை

👍முதலில் பச்சரிசி கால் கப், இட்லி அரிசி ஒரு கப், உளுந்து பருப்பு கால் கப், ஒரு டேபிள் டீஸ்பூன் அளவு வெந்தயம் இவற்றை எல்லாம் நீரில் நன்றாக கழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

👍 பின்பு 4 முதல் 5 மணி நேரம் இந்த பொருட்களை நன்கு ஊற வைக்க வேண்டும். இவை அனைத்தும் ஊறிய பிறகு கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு  அரைத்துக் கொள்ள வேண்டும்.

👍இப்போது இந்த மாவுடன் சலித்து வைத்திருக்கும் சோள மாவை கட்டி இல்லாமல்  கலந்து கொள்ளவும்.

👍பின்னர் ஒரு வானிலையில் சிறிதளவு எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போன்றவற்றை நன்றாக வெடிக்க விட்டு நறுக்கி பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

👍பின்னர் கருவேப்பிலை மற்றும் தாளிசம் செய்த வெங்காய கலவையும் மாவினில் கொட்டி விட வேண்டும்.  பிறகு மாவை நன்கு தேவையான அளவு உப்பை போடு கலந்து இறக்கி விடுங்கள்.

👍இப்போது அடுப்பில் பணிகாரக் கல்லை போட்டு இளம் சூட்டில் தேவையான அளவு எண்ணெயை  ஊற்றி விடவும். பின்னர் மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் விடவும்.

👍 பணியாரம் வெந்த பின்  எடுக்கலாம்.இப்போது சூடான சுவையான சோள பணிகாரம் தயார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …