உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா..! – கவலையை விடுங்க.. கலக்கலான டிப்ஸ் இதோ..!

கொழுப்பு சத்தினை நாம் பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். அது உடலுக்கு நல்லதை கொடுக்கும் நல்ல கொழுப்பு சத்து என்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்து என்று கூறலாம்.

மேலும் மருத்துவர்கள் இந்த கொழுப்பு சத்தினை கொலஸ்ட்ரால் என்று அழைப்பார்கள். அந்த கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தக்கூடிய உணவுகள் என்னென்ன என்பதை இந்த கட்டுரைகள் நீங்கள் பார்க்கலாம்.

நீங்கள் அதிகமாக இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை கரைப்பதில் ஆப்பிள், செர்ரி, ஆரஞ்சு போன்ற பழங்கள் அற்புதமான வேலையை செய்கிறது. இந்த பழங்களை நீங்கள் வாரம் இருமுறை எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை எளிதில் கரைக்க முடியும்.

மேலும் மாம்பழம் பலாப்பழம் போன்ற பழங்களை சாப்பிடும் போது அதில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் கவனத்தோடு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

 உங்கள் எடை அதிகரிக்கும் போது கொலஸ்ட்ராலின் அளவும் அதிகரிக்கும் எனவே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.மேலும் பொறித்த உணவுகளை நீங்கள் சாப்பிடக் கூடாது. அப்படி ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது நீங்கள் முந்திரி, பாதாம், பிஸ்தா வால்நட் போன்றவற்றை  சிறிதளவு சாப்பிடுவது மிகவும் நல்லது.

மேலும் உணவில் அதிக அளவு தயிர் சேர்த்துக் கொள்வதால் உங்களுக்கு பொட்டாசியம், மெக்னீசியம், புரதம் மற்றும் கால்சிய சத்துக்கள் கிடைக்கும். இது கெட்ட கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராடி எரிக்க கூடிய தன்மை இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை பேணுவதிலும் கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் தயிர் முக்கிய பங்கினை வசிக்கிறது.

அனைவருமே மாலை நேரங்களில் உருளைக்கிழங்கை விரும்பி உண்ணுவோம். இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் சிப்ஸ் ஐட்டங்களை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக அந்த நேரத்தில் நீங்கள் பாப்கான் சாப்பிடலாம். அப்படி சாப்பிடும் போது உங்களது அதிகபட்சமான கொழுப்பு கரைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடிய பீட்டா குளுக்கன் சோளம் ,கம்பு, கோதுமை போன்றவற்றில் இருப்பதால் அவசியம் இந்த உணவுகளை கட்டாயம் நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

காய்கறிகளை பொறுத்த வரை கேரட், பூசணிக்காய், கத்திரிக்காய், முட்டைக்கோஸ் போன்றவற்றை சேர்க்கும்போது உங்களுக்கு நல்ல நார் சத்து கிடைக்கும்.

 அது மட்டும் அல்லாமல் கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடிய ஆற்றல் இந்த காய்கறிகளுக்கு உள்ளதால் தொடர்ந்து எந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam