வேண்டாம் என தூக்கி போடுற சௌ சௌ தோலில் இப்படி ஒரு ரெசிபியா..? – அட்ராசக்க..!

பொதுவாகவே அனைத்து வீடுகளிலும் சௌசௌ காய் வாங்குவதை அனைவரும் பெரிதாக விரும்ப மாட்டார்கள். அப்படி வாங்கினாலும் அதில் கூட்டு, குழம்பு என்று வைப்பதோடு நிறுத்தி விடுவார்கள். அந்த காயில் நீங்கள் கூட்டு, குழம்பு வைத்து விட்டாலும் மீதி இருக்கும் தோலை கொண்டு நீங்கள் அற்புதமான ஒரு துவையலை செய்து அசத்தலாம்.

இந்த சௌசௌவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடல் இளைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இதய நோயாளிகளும் சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக இதை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய அளவு ஒரு லோ கலோரியில் இருக்கக்கூடிய காய்தான்.

இந்த துவையலையை சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதற்கு மிகவும் சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். அப்படிப்பட்ட சவ்சவ் துவையல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

 சௌசௌ துவையல் செய்ய தேவையான பொருட்கள்

1.சௌசௌ காயின் தோல் ஒரு கப்

2.உளுந்து பருப்பு ஒரு டீஸ்பூன்

3.வர மிளகாய் இரண்டு 4.தேங்காய் துருவியது அரை கப்

5.தேவையான அளவு உப்பு 6.சிறிதளவு பெருங்காயம்

செய்முறை

சௌசௌ தோலை ஒரு வாணலியில் போட்டு சிறிதளவு எண்ணெயை விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். இது வணங்கிய பிறகு சிறிதளவு எண்ணெயை விட்டு அதில் உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

 அவ்வாறு வறுத்த பின்பு இரண்டு வரமிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு மீண்டும் ஒருமுறை நீங்கள் நன்கு கிளறி வறுக்கவும். இதனை அடுத்து எந்த கலவையை ஒரு தட்டத்தில் மாற்றி விடுங்கள்.

 சூடு ஆறிய பிறகு இதனை மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் தேங்காயும் சேர்த்து சிறிதளவு நீரை விட்டு மைய அரைக்க வேண்டும் ஓரளவுக்கு சட்னி போல் கெட்டியான பதத்தில் அரைத்த இதனை வேறொரு பவுலில் போட்டு விடுங்கள்.

இதனை தாளித்துக் கொட்டாமல் சிறிதளவு பச்சை தேங்காய் எண்ணையை, பெருங்காயம் போட்டு அதில் ஊற்றி கலந்தால் போதுமானது. இப்போது சுவையான சௌசௌ தோல் துவையல் தயார்.

நீங்களும் வீணாக போகும் சௌசௌ தோலில் இதுபோல துவையலை அரைத்து அனைவரையும் அசத்தலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …