என் மகன் வயசு பையன் அவன்.. அன்னிக்கு நைட்டு ரூம் போட்டு… பகீர் தகவல் கொடுத்த நடிகை.!

சினிமாவில் தலை விரித்தாடும் ஒரு விஷயமாக இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் அதிகமாக இருந்து வருகின்றன. எப்போதுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத துறையாக சினிமாத்துறை இருந்து வருகிறது.

அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் கேரளாவில் உருவான ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு பாலியல் குற்றங்கள் குறித்த பல விஷயங்களை வெளியில் கொண்டு வந்தது. அதனை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் தகவல்கள் பல வெளியாகின.

முக்கியமாக பெரும் நடிகர்களே இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களில் இறங்கி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் முக்கிய இயக்குனர்கள் நடிகர்கள் என்று இதில் பலர் சிக்கி வருகின்றனர் கேரள சினிமாதான் மற்ற சினிமாக்களை காட்டிலும் அதிகமாக பாலியல் தொல்லை தரும் சினிமா என்றெல்லாம் பேச்சுக்கள் இருக்கின்றன.

என் மகன் வயசு பையன்

அதற்கு தகுந்தார் போலவே இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கையும் அமைந்திருக்கிறது. ஆனால் மற்ற சினிமா நடிகைகள் கூறும் பொழுது இங்கேயும் ஹேமா கமிட்டியை வைத்தால்தான் உண்மை நிலவரம் என்னவென்று தெரியும் என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஒரு நடிகை பேட்டி கொடுக்கும் போது கேரளாவில் வயதான நடிகைகளை கூட விடுவது கிடையாது என்று கூறியிருந்தார். சாதாரணமாக மற்ற சினிமாக்களில் இளம் நடிகைகள் மீது எல்லா பிரபலங்களும் கண் வைப்பது உண்டு. ஆனால் வயதான நடிகைகளை அக்கா என்று அம்மா என்று அழைத்துவிட்டு அவர்களுக்கு தகுந்த மரியாதையை கொடுத்து விடுவார்கள்.

அன்னிக்கு நைட்டு ரூம் போட்டு

ஆனால் கேரளாவில் அப்படி கிடையாது என்று கூறியிருந்தார். அதற்கு தகுந்தார் போல தற்சமயம் கேரளாவில் பிரபல நடிகையான நடிகை சார்மிளாவும் அதிர்ச்சி அளிக்கும் சில தகவல்களை அளித்திருக்கிறார். இவர் தமிழிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சொல்ல போனால் முதன்முதலாக நல்லதொரு குடும்பம் என்கிற சிவாஜி கணேசன் திரைப்படத்தில்தான் இவர் நடிகையாகவே அறிமுகமானார். அதில் சிறு வயது கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் அவர் மலையாளத்தில் சென்று பிரபலமடைந்தார்.

பகீர் தகவல் கொடுத்த நடிகை

இருந்தாலும் அவ்வப்போது தமிழிலும் இவர் திரைப்படங்களில் நடித்ததுண்டு தமிழில் உன்னை கண் தேடுதே, யாதுமாகி, மகான் கணக்கு, நான், இவன் வேற மாதிரி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பு பெற்றதில்லை என்பதாலேயே இவரை தமிழில் அவ்வளவாக யாருக்கும் தெரியாது என்றாலும் 20க்கும் அதிகமான தமிழ் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒருமுறை இவர் பேட்டியில் கூறும் பொழுது என் மகன் வயது பையன் ஒருவன் ஒருவாட்டி அவன் மனைவியோடு என்னை பார்க்க வந்தான். அவனுக்கு ஒரு 24 வயது தான் இருக்கும். அவனுடைய மனைவி பார்க்க மிக அழகாக இருந்தாள் பார்ப்பதற்கு அப்படியே சினேகா மாதிரியே இருந்தாள் அவனுடைய மனைவி. ஆனால் பார்த்துவிட்டு அன்று இரவு எனக்கு போன் செய்து நான் இன்று இரவு துபாய் கிளம்புகிறேன் உங்களுக்கு ஒரு அறை புக் செய்கிறேன் வருகிறீர்களா? எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன் என்று கூறினான்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது நேரில் பார்க்கும் பொழுது அம்மா என்று அழைத்துவிட்டு இப்பொழுது பெயர் சொல்லி அழைக்கிறானே என்று எனக்கு இருந்தது என்று அந்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் நடிகை சார்மிளா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version