போதை ஊசி போட்டுக்கிட்டு ஸ்பாட்க்கு வரமாட்டார்.. நடிகர் கார்த்திக் குறித்து பிரபலம் சொன்ன ஷாக் தகவல்..!

நவரச நாயகன் என்று மக்களால் அழைக்கப்பட்ட நடிகர் கார்த்திக் பழம் பெரும் நடிகரான முத்துராமனின் மகன் ஆவார். வாரிசு நடிகரான இவருக்கு திரை உலகப் பிரவேசம் எளிதில் அமைந்தது.

இவர் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி பல தமிழ் படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.

நடிகர் கார்த்திக்..

நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளி வந்த வருஷம் 16, கிழக்கு வாசல் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் அக்னி நட்சத்திர படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.

இதனை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நகைச்சுவை உணர்வோடு நடித்திருக்கும் இவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து இருக்கிறார்கள்.

எனினும் கார்த்திக் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டா.ர் அதனால் தான் படங்களில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது என்று பலரும் அவரைப் பற்றி பல்வேறு வகையான கருத்துக்களை சொல்வதுண்டு.

இந்த கருத்துக்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்திருக்கக்கூடிய தகவலானது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பல தரப்பு மக்களிடையேயும் அவர் மேல் வைத்திருந்த அபிப்ராயத்தை தவிடு பொடியாக்கி விட்டது.

என்ன தான் அவர் அப்படி சொன்னார் என்பது பற்றி விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தொடர்ந்து எங்களது பக்கத்தை படியுங்கள்.

போதை ஊசி போட்டுக்கிட்டு ஸ்பாட்டுக்கு வர மாட்டார்..

பாரதம் என்ற மலையாள படத்தை தமிழில் எடுக்க நினைத்தார்கள். இதனை சிபிமலயில் இயக்கியிருந்தார். மேலும் இதில் மோகன்லால், ஊர்வசி, நெடுமுடி வேணு என பலரும் நடிக்க இந்த படத்தை தமிழில் எடுக்க இயக்குனர் வாசு நினைத்தார்.

அந்தப் படம் தான் கார்த்திக் நடிப்பில் வெளி வந்த சீனு. இந்த படத்தில் மாளவிகா, விவேக், ஜனகராஜ் உட்பட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தை தயாரித்தவர் தான் மாணிக்கம் நாராயணன்.

கார்த்திக் குறித்து பிரபலம் சொன்ன தகவல்..

மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் வெளி வந்த சீனு படம் படுதோல்வி அடைய காரணம் டைரக்டர் ராங்கான சப்ஜெக்ட்டை செலக்ட் பண்ணியதோடு ஒரு காமெடி படம் எடுப்போம் என்று நான் சொன்னதை கேட்காமல் மலையாளத்தில் வெளி வந்த படத்தை தமிழில் எடுக்க முயற்சி செய்தார்.

அந்த வகையில் நான் அவருக்கு ஒத்துழைப்பு தருவதாக நினைத்துக் கொண்டு நெடுமுடி வேணு கேரக்டருக்கு சத்யராஜ், மோகன்லால் ,மம்முட்டி யாரையாவது கேட்கலாமா என்று நானே தேட ஆரம்பித்தேன். அது மாபெரும் தவறு என பின் புரிந்து கொண்டேன்.

இந்த விஷயத்தில் கார்த்திக் எங்களை மிகவும் நோகடித்து விட்டார்.அவர் போதை ஊசி போட்டுக் கொண்டு ஷூட்டிங்குக்கு வராமல் இருந்ததை அடுத்து பெருத்த நட்டத்தை சந்தித்தேன்.

கார்த்திக் இந்த மாதிரி இல்லாமல் இருந்திருந்தால் திரையுலகில் இன்னும் பல படங்களில் நடித்து தனது அப்பாவை விட நல்ல பெயர் எடுத்து இருப்பார் என்று சொன்ன விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் கார்த்திக்கின் கேரியர் நாசமாக போதைப் ஊசி தான் காரணமா? என்று பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version