சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த அவர்களில் ஒருவராக ரோபோ சங்கர் திகழ்கிறார். இவர் விஜய் டிவியில் நகைச்சுவை கலைஞராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து இன்றுவரை மக்களை நகைச்சுவை மூலம் கட்டிப் போட்டிருக்கிறார்.
ஏற்கனவே விஜய் டிவியில் கலந்து கொண்டாலே அவர்கள் மிகப் பெரிய ஸ்டார் ஆகி விடுவார்கள் என்பது அசைக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது ரோபோ ஷங்கரும் பல படங்களில் மிக பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.
இவரது மகளான இந்திரஜா சங்கர் விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் இவர் நடித்தது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை தந்தது.மேலும் இவர் சமீபத்தில் வெளிவந்த விருமன் படத்தில் அதிதி சங்கருக்கு தோழியாக நடித்து அசத்தியிருப்பார்.
இவருக்கு பரத நாட்டியம் என்ற தொன்மையான நடனம் மிகச் சிறப்பாக தெரியும். மிகப்பெரிய உடல் எடையோடு இவர் காணப்பட்டாலும் பரத நாட்டியம் ஆடுவதில் வல்லவர். அனைவரையும் இவர் பரத நாட்டியத்தின் மூலம் தன்பக்கம் ஈர்க்க கூடிய திறன் படைத்தவர்.
இந்த நிலையில் இவர் தென்னிந்திய கலைகளில் சிறப்புமிக்க ஆடல் கலையை ஆடி அதை புகைப்படம் எடுத்து தற்போது வெளியிட்டிருக்கிறார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு காலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் மிகப்பெரிய ஆச்சரியத்தில் உறைந்து இருக்கிறார்கள்.
இம்மாம் பெரிய சைசு உடம்பை வச்சுக்கிட்டு அசால்டா எப்படி கால புடிச்சிட்டு அக்கா நிக்கறாங்க.. என்று அனைவரும் கேள்விகளை கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். மேலும் எடை சாதிப்பதற்கு தடை அல்ல என்பதை இவர் மிகச் சிறப்பாக உணர்த்தியிருக்கிறார்.
எனவே உடல் அதிகமாக இருப்பதால் எனக்கு வெளியே செல்ல முடியவில்லை என்பது போன்ற ஒருவர் கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய அனைவரும் இவரைப் பார்த்து வெளியே வந்து சாதிக்க வேண்டும் என்பதை கூறாமல் கூறியிருக்கிறார்.