கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..! – கட்டாயம் படிங்க..!

இந்தியச் சமையலறைகளில் மசாலா பொருட்களின் வரிசையில் கிராம்பு ஒரு முக்கியமான மசாலா பொருளாக இடம் பிடித்துள்ளது. எந்த கிராம்பு எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருந்த போதிலும் இதை அதிகமாக உணவில் சேர்ப்பதால் பக்க விளைவுகள் பல ஏற்படுகிறது என்பதை பலருக்கு தெரியாமல் உள்ளது.

மருத்துவ குணம் இருக்கிற கிரம்பினை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் அந்த ஹார்மோனின் சுரப்பை குறைத்து விடக் கூடிய ஆற்றல் கிராம்புக்கு உள்ளது.

 கிராம்பினை அதிக அளவு உட்கொள்ளக் கூடியவர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டு பார்வை மங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

 மேலும் கிராம்பை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது உடலின் வெப்ப நிலையில்  ஏற்றத்தாழ்வு ஏற்படுவதோடு இது உடல் வெப்பநிலையை அதிகரித்து விடும். இதன் மூலம்  சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படலாம்.

 அதுபோலவே பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு காலகட்டங்களில் கிராம்பை அதிகளவு சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்களும், கிராம்பினை உணவில் அதிகம் சேர்ப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

 மேலும் உடலில் குளுக்கோஸின் அளவு குறைவாக இருக்கக்கூடிய நபர்கள் கட்டாயம் கிராம்பின் பயன்பாட்டை தவிர்த்து விடுதல் அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 எனவே மருத்துவ பயன் அதிகம் உள்ள கிராம்பினை அதிகமாக எடுத்துக் கொண்டால் நன்மை ஏற்படும் என்று கண்மூடித்தனமாக நம்பி உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது இது போன்ற குறைபாடுகளை நமக்கு ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்லாமல் எந்த வகையான மருத்துவப் பொருட்கள் அல்லது உணவுப் பொருட்களாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை உங்கள் நினைவில் வைத்துக் கொண்டால் உங்கள் ஆரோக்கியத்தை எப்போதுமே பேணி பாதுகாக்க முடியும்.

எனவே இதுபோன்ற முக்கியமான தகவல்களை உங்கள் மனதில் வைத்துக் கொண்டு சமையலறையில் நீங்கள் பக்குவமாக உணவினை சமைத்தால் நிச்சியமாக மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாமல் குடும்ப ஆரோக்கியத்தை உங்கள் கையில் வைத்துக் கொள்ள முடியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version