என்னது.. இதெல்லாம் Cochin Haneefa டைரக்ட் பண்ண படங்களா.. என்னப்பா சொல்றீங்க..?

சலீம் அகமது கோஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவரை Cochin Haneefa என்று அழைத்தால் தான் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் ஒரு பிரபல நடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமையை கொண்ட ஒரு அற்புதக் கலைஞர்.

இதையும் படிங்க: விஜய் நடிக்க மறுத்து.. ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள்.. லிஸ்ட் போயிகிட்டே இருக்கே..

இவர் நடிகர் கலாபவன் நாடகக் கலைக்கூட்டத்தில் இணைந்து நாடக நடிகராக ஆரம்ப காலத்தில் நடித்தார். இதனை அடுத்து ஹனீபா என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றதால் தனது பெயரை கொச்சி ஹனீபா என்று மாற்றிக் கொண்டார்.

கொச்சி ஹனீபா..

ஆரம்ப காலத்தில் மலையாள திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்த கொச்சி ஹனீபா ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படத்திலும் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த-வரை மகாநதி, லேசா லேசா, வேட்டைக்காரன், பாச பறவைகள், வானமே எல்லை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், நகைச்சுவை வேடத்திலும் நடித்து அசத்தியவர்.

டைரக்ட் செய்த தமிழ் படங்கள்..

மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் அறியப்பட்ட கொச்சி ஹனீபா தமிழில் திரைப்படங்கள் பலவற்றை இயக்கி இருக்கிறார் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

ஆனால் அவர் தமிழில் ஆறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இது குறிப்பாக 1998 ஆம் ஆண்டு இவர் தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம் எந்த படம் என்று நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள்.

இந்தப் படம் ஒரு ஸ்பெஷலான திரைப்படம் என்று கூறலாம். இதற்கு காரணம் இந்த திரைப்படத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கதை எழுதி இருந்தார். இந்தப் படத்தில் சிவகுமார், லட்சுமி போன்ற முக்கிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படம் தான் பாசப்பறவைகள் இந்த படத்தை குடும்பம் குடும்பமாக ஒன்றாக சென்று திரையரங்குகளில் பார்த்து மாபெரும் வெற்றியை தந்தார்கள்.

இதனை அடுத்து அதே ஆண்டு மற்றொரு படத்தை இவர் இயக்குகிறார். அந்த படம் தான் பாடாத தேனீக்கள். இந்தப் படத்தில் சிவக்குமார் மற்றும் ராதிகா நடித்திருந்தார்கள். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனை அடுத்து சினிமாவில் இரண்டு ஆண்டுகள் இயக்கத்திற்கு விடுமுறை விட்ட இவர் தனது மூன்றாவது படத்திலும் சிவக்குமார் மற்றும் ராதிகாவை நடிக்க வைத்தார்.

அந்தப் படத்தின் பெயர் பகலில் பௌர்ணமி. இந்த படமும் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியை தராததை அடுத்து அவர் அடுத்த படமான பிள்ளை பாசம் என்ற படத்தை 1991 ஆம் ஆண்டு பூம்புகார் ப்ரொடக்ஷன் மூலம் இயக்குகிறார். இதுவும் தோல்வி படமாக அமைய அதே ஆண்டு மீண்டும் ஐந்தாவது படத்தை டைரக்ட் செய்கிறார் கொச்சி ஹனீபா.

அந்தப் படத்தின் பெயர் வாசலில் ஒரு வெண்ணிலா இதில் அமலா, ஜனகராஜ் போன்றவர்களை வைத்து இயக்கி இருந்தார். இதுவும் தோல்வி படமாக அமைய தனது ஆறாவது படத்தை 1993 கொச்சி ஹனீபா டைரக்ட் செய்கிறார். இந்தப் படத்தின் பெயர் நாளை எங்கள் கல்யாணம்.

இதையும் படிங்க: எனக்கு “அந்த” ஆசையே இல்ல.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா.. தனுஷை பிரிந்தது குறித்து ஓப்பன் டாக்

இந்த படமும் தோல்வியில் அமைந்ததால் இவர் டைரக்ஷன் தொழிலை விட்டு விட்டு மீண்டும் மலையாள படத்தை மட்டும் டைரக்ஷன் செய்வதில் கவனத்தை செலுத்தினார். மேலும் தமிழ் படங்களை விட்டு விட்டு இரண்டு மலையான படங்களை டைரக்ட் செய்த இவர் சரியாக படங்கள் செல்லாத காரணத்தால் டைரக்ஷனில் இருந்து நடிப்புக்கு தாவி விடுகிறார்.

இதனை அடுத்து கல்லீரல் புற்று நோயால் இறந்து போன இவர் எந்திரன் படத்தில் கூட டிராபிக் போலீஸ் ஆக நடித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதையடுத்து கொச்சி ஹனீபா இவ்வளவு தமிழ் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்களா? என்று ரசிகர்கள் ஆச்சரியத்தோடு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version